தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வேண்டும்: ஆதார், இ-சேவை மைய ஊழியர்கள் போராட்டம்

20 Jul 2026, 9:58 pm
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வேண்டும்: ஆதார், இ-சேவை மைய ஊழியர்கள் போராட்டம்
<p><strong>பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வேண்டும்: ஆதார், இ-சேவை மைய ஊழியர்கள் போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 20 - பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி திங்களன்று (ஜூலை 20) சென்னையில் ஆதார், இ-சேவை மைய ஊழி யர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்தின் கீழ் உள்ள ஆதார், இ-சேவை மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் இவர்களை பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பிஎப், இஎஸ்ஐ மற்றும் சம்பள ரசீது வழங்க வேண்டும், 3 ஆண்டுகளாக மறுக்கப் படும் பொங்கல், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் கே.சி. கோபிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணா நிலை போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலை வர் ஜி. சுகுமாறன் தொடங்கி வைத்தார். சங்கத் தின் பொதுச் செயலாளர் கா. மனோஜ்குமார் துணைத்தலைவர் எஸ்.சுகுமார் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் நிறை வுரையாற்றினார். சங்கத்தின் மாநில பொருளா ளர் பி. சசிரேகா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.