ஏ.ராம்குமார் - கே.அருணா திருமண வரவேற்பு நிகழ்ச்சி
6 Feb 2026, 5:17 pm
<p><strong>ஏ.ராம்குமார் - கே.அருணா திருமண வரவேற்பு நிகழ்ச்சி</strong></p>
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதித் தலைவரும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஏ.ராம்குமார் - கே.அருணா திருமண வரவேற்பு விழா வியாழனன்று (பிப்.5) தி.நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாயை கட்சியின் மூத்த தலைவரும் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவருமான அ.சவுந்தரராசனிடம் மணமக்கள் வழங்கினர். சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திர பாரதி, பி.கே.மூர்த்தி, ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
