நீர்நிலைகளை காரணம் காட்டி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக மாநில அரசுக்கு அ.சவுந்தரராசன் கோரிக்கை
16 Nov 2025, 3:30 pm<p><strong>நீர்நிலைகளை காரணம் காட்டி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக மாநில அரசுக்கு அ.சவுந்தரராசன் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, நவ.16- திருவொற்றியூர் ராம நாதபுரம், திருவீதியம்மன் நகர், கிரிஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு பகுதிக் குழு சார்பில் சனிக்கிழமை யன்று பாரத் நகரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசுகையில், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த வர்கள் தேர்தல் முடிந்தபின் மக்களை மறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது என்றார். கடந்த 20 ஆண்டுகளில் சென்னை மிகவும் அடர்த்தி யான நகரமாகி, குறிப்பாக வடசென்னையில் மக்கள் வாழத் தகுதியற்ற நிலை யில் வாழ்கிறார்கள் என்றார். கோயில் நிலம், நீர்நிலை, புறம்போக்கு என காரணம் காட்டி பல்லாண்டுகளாக குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்துவது நியாய மல்ல, மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்த நிலை யில் மக்கள் தாங்களாக இடங்களைத் தேர்ந்தெடுத்து குடியிருக்கிறார்கள், நீண்ட காலமாக தண்ணீர் வராத பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத் தாமல் அதே இடத்தில் நிரந்தரமாக குடியிருக்க நட வடிக்கை எடுப்பதுதான் அரசின் கடமை என்றார். வட சென்னையில் சுற்றுச்சூழல் மாசு, குப்பைப் பிரச்சனை, உடல்நல பாதிப்புகள் உள்ள தாகவும், மணலி விரைவு சாலையில் விபத்துகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனல்மின் சாம்பல்கள் கொட்டப்படுவ தால் மீன் வளங்களும் மீன வர்களும் பாதிக்கப்படு வதை தடுக்க வேண்டும் என்றார். தொழிற்சாலை களில் நிரந்தரத் தொழிலா ளர்கள் குறைந்து அனை வரும் ஒப்பந்தத் தொழி லாளர்களாக மாற்றப்படு கிறார்கள், குறைந்தபட்ச கூலி மறுக்கப்படுகிறது, ராமநாதபுரம் மக்களுக்கு நீர்நிலை காரணம் காட்டி காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது ஆனால் குறைந்தபட்ச கூலி கொடுக்காத முதலாளி களுக்கு நோட்டீஸ் கொடுக்க ப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் குடியிருப்புகளை அழிக்கக் கூடாது, இந்த பிரச்சனை யில் சிபிஎம் மக்கள் பக்கம் நிற்கும், பல்லாண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பழுத டைந்த சுனாமி குடியிருப்பு களை சீரமைக்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.கே.புஷ்பா, பி.சுரேஷ்பாபு, கே.சுரேஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அகல்யா, நசீம் அகமது ஆகியோரும் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஏ.தியாக ராஜன் வரவேற்றார். ஜான்சன் நன்றி கூறினார்.</p>
