தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

30 Mar 2026, 3:40 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

குவைத்தில் ஏவுகணைத் தாக்குதல் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு! இராமநாதபுரம்: குவைத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  சந்தான செல்வம் உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், தேரிரு வேலி உள்வட்டம், இளங்காக்கூர் குரூப், அணிக்குருந்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சந்தான செல்வம் (37). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி, அல்அதோ இஞ்சினியரிங் தனி யார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், குவைத்திலுள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய  தாக்குதலில் சந்தான செல்வம் உயிரிழந்ததாக இந்தியா தூத ரகம் தெரிவித்துள்ளது.  சந்தான செல்வத்தின் இந்த மரணம், அணிக்குருந்தன் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தான செல்வத் திற்கு கெளசல்யா என்ற மனைவியும், சஸ்வின் (8) என்ற மகனும், சாய்யுவான்யா (2) என்ற மகளும் உள்ளனர்.

திமுக கூட்டணிக்கு  இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு! சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.  ஸ்டாலினை இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான செ.கு. தமிழரசன் திங்களன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில்  சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமது ஆதரவைத் தெரி வித்தார். தமிழகத்தின் மூத்த தலித் அரசியல் தலைவர்களில் ஒருவரான செ.கு. தமிழரசன், 4 முறை சட்டமன்ற உறுப்பி னராக இருந்துள்ளார். நீண்டகாலமாக அதிமுக கூட்டணியில் இருந்துவந்த அவர், 2026 தேர்தலில் திமுக தலைமையிலான  கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்ராஜின் தாயார் மறைவு:  முதலமைச்சர் இரங்கல் சென்னை: திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் (86) மார்ச் 29 அன்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அன்னை யின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது என்றும், இந்தத் துயர்மிகு வேளையில் பிரகாஷ்ராஜுக்கு தனது ஆறு தலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.296.4 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்த நாள் முதல் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.61.98 கோடி ரொக்கமாக வும், ரூ.197.35 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி  உள்ளிட்ட உலோகங்களாகவும், ரூ.8.39 கோடி மதிப்பில்  போதைப் பொருட்களாகவும், ரூ.1.17 கோடி மதிப்பில் மது பானமாகவும், ரூ.27.51 கோடி மதிப்பில் இதரப்  பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

பாமக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில்முதல்  கட்டமாக 3 தொகுதி களுக்கு வேட்பாளர் பட்டி யல் அண்மையில் வெளி யிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பா ளர் பட்டியலை திங்க ளன்று அன்புமணி வெளி யிட்டார். சென்னை பெரம்பூர்  தொகுதியில் திலகபாமா,  தருமபுரியில் சவுமியா  அன்புமணி வேட்பாள ராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். விருத்தாசலத் தில் தமிழரசி ஆதிமூலம்,  சேலம் (மேற்கு)-மு.கார்த்தி, பெண்ணாகரம்-பாடி வெ. செல்வம், போ ளூர்-சி.ஆர். பாஸ்கரன், திருப்போரூர்-கே. பாலு,  ஜெயங்கொண்டம்-வைத்தி, சேலம் (வடக்கு)-எஸ்.  சதாசிவம், விக்கிரவாண்டி-சி. சிவக்குமார், எம்.ஏ. சோளிங்கர்-க. சரவ ணன், மயிலாடுதுறை-சித்தமல்லி பழனிசாமி, உத்திரமேரூர்-பெ. மகேஷ் குமார், ரிஷிவந்தியம்-அ.ப.  செழியன், காட்டுமன்னார் கோவில் (தனி)-அன்பு.சோழன் ஆகியோர் வேட் பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர்.

காஞ்சியில் உதயநிதி பரப்புரை  சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை செவ்வாயன்று முதல மைச்சர் திருவாரூரில் தொடங்க இருக்கும் நிலையில், துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தனது தேர்தல்  பரப்புரையை திங்க ளன்று (மார்ச் 30) காஞ்சி புரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு  இல்லத்தில் மரியாதை  செலுத்தி தொடங்கினார்.

ஏப்.4-இல் பிரதமர் தமிழகம் வருகை சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றன. இதற்கிடையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங் களது கட்சி வேட்பாளர்கள்,  கூட்டணி கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து பிரச் சாரம் செய்து வருகின்ற னர்.   சென்னை மயிலாப்பூர்  பாஜக வேட்பாளரை ஆத ரித்து ஏப்ரல் 4 ஆம்  தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள் ளார். மேலும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத்  தொடர்ந்து, கன்னியா குமரி மற்றும் கோவை பகுதிகளிலும் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பா ளர்களை ஆதரித்து பிரத மர் மோடி விரைவில்  பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.