தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காதலிக்க மறுத்ததால் வாலிபர் கொடூரச் செயல் பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை

19 Nov 2025, 3:33 pm
காதலிக்க மறுத்ததால் வாலிபர் கொடூரச் செயல் பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை
<p><strong>காதலிக்க மறுத்ததால் வாலிபர் கொடூரச் செயல் பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் இராமநாதபுரம், நவ. 19 &ndash; இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் &nbsp;மாரியப்பன் - கவிதா தம்பதியின் மகள் பர்வதவர்த்தினி (17), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். &nbsp;இவர், புதன்கிழமை (நவ. 19) &nbsp;காலை 8.30 மணியளவில், பள்ளிக் குச் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, &nbsp;முத்துமாரி தம்பதியின் மகன் முனி ராஜ் (20) என்பவர் வழிமறித்து கத்தி யால் கழுத்தில் குத்தி கொடூரமாக படுகொலை செய்தார். மாணவி பர்வதவர்த்தினியை ஒரு தலைபட்சமாக முனிராஜ் காதலித்த தாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த நிலையிலேயே, அவரைப் படுகொலை செய்த தாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் முனிராஜை கைது செய்து &nbsp;போலீசார் விசாரணை நடத்தி &nbsp;வருகின்றனர். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் &nbsp;செயலாளர் ஆர்.குருவேல் &nbsp;கண்ட னம் தெரிவித்துள்ளார். மாணவி &nbsp;பர்வதவர்த்தினியின் குடும்பத்திற்கு &nbsp;உரிய இழப்பீடு வழங்க வேண்டும் &nbsp;என்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு சட்ட நடவடிக்கையின் மூலம் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பள்ளி மாணவிகள், இளம்பெண் கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.