தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அகிராமம்டிப்படை வசதிகளுக்கு ஏங்கும் களத்து மின்னப்பாளையம்

21 Dec 2025, 3:21 pm
அகிராமம்டிப்படை வசதிகளுக்கு ஏங்கும் களத்து மின்னப்பாளையம்
<p><strong>அகிராமம்டிப்படை வசதிகளுக்கு ஏங்கும் களத்து மின்னப்பாளையம்</strong></p> <p>ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஈஞ்சம்பள்ளி கிராமம். இந்த ஊராட்சியில் களத்து மின்னப்பாளையம் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள் ளது. சுமார் 300 குடும்பத்தினர் வசித்து &nbsp;வரும் இக்குடியிருப்பிற்கு. மேல் நிலைத் தொட்டி அமைத்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கப் படுகிறது. இத்தொட்டி கடந்த 23 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் &nbsp;தூண்கள் பழுதடைந்துள்ளது. தொட்டி யின் அடிப்பகுதியும் காரை பெயர்ந்து &nbsp;கம்பிகள் தெரிகிறது. பழுதான தொட்டி பராமரிக்கப்படாமல் எந்த நேரமும் விபத்து நேரலாம் என்ற &nbsp;நிலையில் உள்ளது. மேலும், ஜல் ஜீவன் (உயிர்நீர் இயக்கம்) என்ற பெய ரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு மேல்நிலைத் &nbsp;தொட்டி கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு &nbsp;கட்டப்பட்டது. இதிலிருந்து ஒவ்வொரு &nbsp;வீட்டிற்கும் இணைப்பு வழங்கப்பட் டது. ஆனால், ஒருநாள் கூட தண்ணீர் &nbsp;ஏற்றி விநியோகம் செய்யப்பட வில்லை. இத்திட்டத்திற்காக ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பல கோடி மதிப்பில் நீருந்து நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கிருந்து களத்து மின்னப்பாளையம் தொட்டிக்கு செல் லும் தண்ணீர் குழாய்கள் பழுதடைந்து சீரமைக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தண்ணீர் வரி செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. குடியிருப்பில் 9 தெருக்கள் இருந் தாலும் 3 வீதிகளுக்கு மட்டும் தான் &nbsp;சாக்கடை வசதி உள்ளது. மற்ற வீதிகள் கான்கிரீட் மற்றும் தார்ச்சாலையாக இருந்தாலும், பழுதடைந்த நிலையில் &nbsp;உள்ளது. முறையான பராமரிப் பில்லை. அப்பகுதியில் இருக்கும் அரசு &nbsp;நிலத்தில் வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. அதில் 4 கடைகள் அமைக் கப்பட்டுள்ளது. இரண்டில் பகுதி &nbsp;நேர நியாயவிலைக்கடை செயல்படு கிறது. மற்ற இரண்டும் பூட்டியே கிடக் கிறது. இந்த கட்டிடமும் பராமரிப்பின்றி &nbsp;காணப்படுகிறது. ரேசன் பொருட்க ளாக நிற்பவர்கள் மீது கான்கிரீட்கள் விழும் அபாயம் உள்ளது. இது பற்றி &nbsp;ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டால் ஒரு பலனுமில்லை என்று கூறப்படு கிறது. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் கள் மற்றும் தலைவர் இருந்த போதும், தற்போது தனி அலுவலர் பொறுப் பிலும் இதே நிலை தான் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் வீரன் மற்றும் &nbsp;ஆரான் ஆகியோர். அதுபோக, அந்த ஊரின் தொடக் கத்தில் ஒரு களம் அமைக்கப்பட்டி ருக்கிறது. அதற்கு முன்பாக அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை விடப்பட்டது. &nbsp;ஆனால், கோரிக்கை நிறைவேற வில்லை. அரசும், மாவட்ட நிர்வாக மும் இம்மக்களின் குறைகளை போக்குமா? என்ற கேள்வி எழுந்துள் ளது. - சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.