கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி சிக்கியது!
29 Nov 2025, 4:58 pm
<p><strong>கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி சிக்கியது!</strong></p>
<p>உதகை, நவ.29- தேவர்சோலை பகுதியில் 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந் துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் தேவர்சோலை அருகே உள்ள கொட்டாய் மட்டம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி தாக்கி கொன்ற நிலையில், அப்பகுதி மக் கள் புலியை பிடிக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்த னர். இதனையடுத்து வனத்துறையினர் கொட் டாய் மட்டம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், நான்கு இடங்களில் புலியை பிடிக்க பிரத்தியேக கூண்டு வைத்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண் டனர். இந்நிலையில், சனியன்று கொட்டாய் மட்டம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் புலி சிக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்ட னர். பிடிபட்ட புலியை முதுமலை புலிகள் காப் பக வனப்பகுதியில் விடுவிப்பதா? அல்லது வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு செல்வதா? போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
