பலாப்பழ குடோனில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து
3 Jan 2026, 4:57 pm
<p><strong>பலாப்பழ குடோனில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து</strong></p>
<p>கடலூர், ஜன. 3- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் சாலையில் பலாப்பழ சேமிப்பு குடோன்கள் அமைத்து, உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குப் பலாப்பழங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது பலாப்பழ சேமிப்பு குடோனில் நள்ளிரவு திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர் அடுத்தடுத்து மேலிருப்பு பாலமுருகன், தாழம்பட்டு முத்து ஆகியோரது குடோன்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்தத் தீ விபத்தில் நான்கு சேமிப்பு குடோன்களிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் பலாப்பழங்கள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து பண்ருட்டி மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் தீவிர விசாரணை </p>
