அவலப்படும் மனித உரிமைகள் தொடரும் மீறல்களின் கதை - எம்.ஜே.பிரபாகர்
7 Dec 2025, 3:52 pm

அவலப்படும் மனித உரிமைகள் தொடரும் மீறல்களின் கதை - எம்.ஜே.பிரபாகர்

“சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது, நீதியை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன. மிருகங்களை காப்பாற்ற பல அமைப்புகள் இருக்கின்றன. மக்க ளைக் காப்பாற்றத்தான் யாரும் இல்லை.” – கவிக்கோ அப்துல் ரகுமா னின் இந்த வரிகள், இன்றைய மனித உரிமைகளின் அவல நிலையைக் கண்ணாடிபோல் காட்டுகின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, மனித உரிமை மீறல்கள் காலங்கா லமாகப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது சம்பந்தமில்லாத மக்கள் கொத்துக் கொத்தாக வன்கொடுமை செய்யப்பட்ட கொடு மைகள், வாச்சாத்தி சம்பவம் போன்ற வற்றுக்குப் போராட்டங்களுக்குப் பின்னரே நியாயம் கிடைத்தது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு இன்னமும் முழுமையான நியாயம் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் தொடங்கி சாத்தான்குளம், மானா மதுரை வரையிலான தொடர் காவல் மரணங்கள் நீடிக்கின்றன. தவறிழைத்த வர்கள் சுட்டிக் காட்டப்பட்ட பின்பும் நடவடிக்கை இல்லை. நீதிமன்றங் களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தா லும், ‘பல்பீர் சிங்’குகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மனித உரிமை இயக்கங்கள் களத்தில் இறங்கி நீதிக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. காலத்தின் குரல்: தோழர் வீ.பழனியின் படைப்பு இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரும், திரு நெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் செயலாளருமான தோழர் வீ.பழனி எழுதியுள்ள “மனித உரிமைகள்” எனும் நூல், அடிப்படை உரிமைகளின் அவசியத்தை மிக எளிமையாகப் படைத்துள்ளது. வாழ்வுரிமை, சித்திரவதை யிலிருந்து பாதுகாக்கும் உரிமை, நியாய மான விசாரணைக்கான உரிமை, பேச்சுரிமை, சமத்துவம் போன்ற அடிப்ப டை உரிமைகளை அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்நூல் பேசுகிறது. 64 தலைப்புகளில் ஒரு பார்வை அடிப்படை உரிமைகள், மனித உரிமை அமைப்புகள், உயிர் வாழும் உரிமை, குழந்தைகள் உரிமை, தீண்டா மை வன்கொடுமைகள், இன ஒதுக்கல், சிறுபான்மை மக்கள் ஆணையம், சிறைக் கொடுமைகள், பத்திரிகை சுதந்திரம் என 64 தலைப்புகளில் நூலா சிரியர் மிக அருமையாக விவரித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமைத்தனம், பாலியல் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படு வது, அண்ணல் அம்பேத்கர் சுட்டிக் காட்டிய தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகள் பற்றியும் இந்நூல் பதிவு செய்துள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்கு தல்கள், குண்டு வெடிப்பு சம்பவங் களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அரசு வலியுறுத்தும் குற்றச்சாட்டுகள், பத்திரிகை சுதந்திரம் மீதான உரிமை மீறல்கள் குறித்தும் நூலாசிரியர் தன் பார்வையைப் பகிர்ந்துள்ளார். எளிய குடிமகனுக்கான வழிகாட்டி மனித சமூகம் அடிமைச் சமுதா யத்தைக் கடந்து வந்த வரலாற்றையும், பல கொடுமைகளுக்கு உள்ளான சம்பவங்களையும் தொகுத்து இந்நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நாட்டின் ஒவ்வொரு சாதாரணக் குடி மகனும் தங்களுக்குள்ள அடிப்படை உரிமைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், குறிப்பாகக் களச் செயல்பாட்டாளர்கள் அவசியம் படித்து, தேவையான நேரங்களில் பயன்படுத்து வதற்கு உகந்த நூல் இது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் அற்ற சமு தாயத்தைப் படைக்க இந்நூல் உறு துணையாக அமையும் என்பதில் ஐய மில்லை. மனித உரிமைகள் வீ. பழனி விலை ₹ 60/- வெளியீடு அ ஆ இ பதிப்பகம், பாளையங்கோட்டை 627007 தொடர்பு எண் - 9443391196

வகித்த பதவிகள் அல்ல போராட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்

ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் எப்படிப் போராட்ட நெருப்பில் புடம் போடப்படு கிறார் என்பதன் உயிர் சாட்சி தோழர் டி.ராமன். எம்ஜிஆர் ரசிகராய் இருந்து ஓர் கிராமப்புற விவசாயக் குடும்பத்து இளைஞனாக வேலைதேடி சென்னைக்கு வந்து தொழிலாளிவர்க்க அரசியலைப் படிப்படியாக உள்வா ங்கிய அனுபவம், எளிமையாய் ஆனால் வலுவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. தோழர் டி.ராமன் எழுதிய “ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம்” எனும் நூல் ஒரு தொழிலாளியின் ஐம்பதாண்டு கால பிசிறற்ற அரசியல் பயணத்தை நமக்குச் சொல்லுகிறது. அதில் உழைக்கும் வர்க்க நலன் மட்டுமே மைய இழை. போராட்டம், அடி, உதை, சிறை எதுவும் அவர் உறுதியைக் குலைக்கவில்லை. புடம் போட்டது என்பதுதான் செய்தி. திருவான்மியூர் பகுதியின் உழைக்கும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் தோழர். டி. ராமன். உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோர் வார்த்தெடுத்த அன்புத் தோழர் டி.ராமன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய உறுதி மிக்க போராளித் தோழன். சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி யை உருவாக்கிய காலத்தில் எம்மோடு தோள் இணைந்தவர் டி.ராமன். அன்று தொட்டு எனக்கும் அவருக்குமான தோழமை உறவு தொடர்கிறது. ஆட்டோ சங்கர் வழக்கு, தோழர் பிரதீப் குமார் கொலை வழக்கு, கல்லுக்குட்டை குடி யிருப்பு மக்கள் போராட்டம், பெத்தேல் நகர் வழக்கு, காலவாய் கரையோர மக்கள் போராட்டம், பர்மா காலனி போராட்டம் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களோடு இவர் நின்ற உரிமைப் போராட்டங்கள்தாம் இவர் வாழ்க்கை. கம்யூனிஸ்டுகளை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் ’குபீர் அறிவாளிகளுக்கு’ தோழர் ராமன் போன்ற உழைப்பாளி மக்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க வாழ்க்கைதான் பதிலடி. “வகித்த பதவிகள் அல்ல போரட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்” என்பதன் சாட்சியே தோழர் டி.ராமன். பேரன் தூண்டிவிட்ட தாத்தாவின் எழுத்து இந்நூல். ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம் டி.ராமன், தூவல் கிரியேஷன்ஸ், செல்பேசி 90945 74500, vedhaperumal@gmail.com, பக்கங்கள் : 112.