தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிமையியல் வழக்குகளில் தனி நீதிபதி நேரடியாக தலையிட முடியாது! ஜி.ஆர். சுவாமிநாதன் அதிகார எல்லையை மீறி உத்தரவிட்டுள்ளார்

18 Dec 2025, 4:38 pm
உரிமையியல் வழக்குகளில் தனி நீதிபதி நேரடியாக தலையிட முடியாது!  ஜி.ஆர். சுவாமிநாதன் அதிகார எல்லையை மீறி உத்தரவிட்டுள்ளார்
<p><strong>உரிமையியல் வழக்குகளில் தனி நீதிபதி நேரடியாக தலையிட முடியாது! &nbsp;ஜி.ஆர். சுவாமிநாதன் அதிகார எல்லையை மீறி உத்தரவிட்டுள்ளார்</strong></p> <p>மதுரை, டிச. 18 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகில் தான் கார்த்திகை தீபம் &nbsp;ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில், &nbsp;புதிதாக தர்கா அருகில் தீபமேற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் ல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு விசாரித்து வருகிறது. &nbsp;ஏற்கெனவே, மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு, கோவில் நிர்வா கம், மதுரை மாவட்ட ஆட்சியர், அற நிலையத்துறை, காவல்துறை தரப்பில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமையன்று தமிழக அரசு &nbsp;சார்பில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதங்களை வைத்தார். &nbsp;அவர், தெளிவான முறையீடோ, உறுதியான ஆவணங்களோ இல்லா மல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், கோவில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா, என்பதே இந்த வழக்கின் மையக் கேள்வி என்றும் தெரிவித்தார். கோவில் கலாச்சாரம், ஆகம விதி கள், பூஜை விதிகள், அர்ச்சனை முறை கள், வழிபாட்டு உரிமைச் சட்டம் ஆகிய அனைத்தும், முறையாகவும் சட்டப் பூர்வமாகவும் இருக்கும் நிலையில், தனி நீதிபதி உத்தரவு பொருந்தாது. தனி நபர் ஒருவர் முன்வைக்கும் கலாச் சாரத்தை கோவில் நிர்வாகம் புதி தாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் கூறினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்தி கை தீபமானது, கோவில், அறநிலை யத்துறை, தேவஸ்தானம் மற்றும் அறங் காவலர் குழு ஆகியோரின் ஒருமித்த முடிவின்படி, உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் வழக்கமான முறையில் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் கோவில் தரப்பிடம் உள்ளன. இதனை மாற்றக் கோரும் மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடிக்கு உரியது என்றார். மேலும், மலை உச்சி யில் இருப்பது தீபத்தூண் என்று சொல்வதற்கு எந்தவித வரலாற்று ஆதா ரங்களும் இல்லை என்றும், 1920-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையை யும் ஆய்வு செய்தபோது, மலை உச்சி யில் தர்கா மட்டுமே உள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ராமன் சுட்டிக்காட்டினார். அப்போது தூண் இருந்திருந்தால் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும்; ஆனால் எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் வாதிட்டார். தீபத்தூண் என்ற பிரச்சனை எழுவ தற்கு முன்பே, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரிபார்க்க நில அளவைத்துறை ஆய்வு செய்ததாகவும், மலை உச்சியில் தர்கா &nbsp;உள்ள நிலையில் அந்த தூண் எப்போது அமைக்கப்பட்டது என்பதே கேள்விக் குறியாக இருப்பதாகவும் கூறினார். தீபம் ஏற்றுவது போன்ற கோவில் நடைமுறைகள் உரிமையியல் தன்மை கொண்டவை என்றும், இவை உரி மையியல் நீதிமன்றத்திலேயே விசார ணை செய்யப்பட வேண்டும்; உயர் நீதி மன்ற தனி நீதிபதி நேரடியாக தலையிட முடியாது என்றும் ராமன் குறிப்பிட்டார். பாண்டி கோவில் வழக்கிலும், அர்ச்சகர் பூஜை செய்யும் உரிமை குறித்து உரிமை யியல் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார். அறநிலையத்துறைச் சட்டத்தின் 63E பிரிவு இவ்விவகாரத்தில் பொருந்தும் என்றும், எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இறுதி அதி காரம் அறநிலையத்துறைக்கே உள் &nbsp;ளது என்றும் அரசு தலைமை வழக்கறி ஞர் விளக்கினார். ஒரு கோவில் பல &nbsp;ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கங்களை திடீர் உத்தர வால் மாற்ற முடியாது என்றும், தனி நீதிபதி தனது அதிகார எல்லையை மீறி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் குற்றச்சாட்டினார். இதையடுத்து, உரிமையியல் நீதி மன்ற உத்தரவுகள் என்ன, உயர்நீதி மன்ற தனி நீதிபதி இவ்வகை விவகா ரங்களில் தலையிட முடியுமா என்பதற் கான சட்ட ஆதாரங்கள் மற்றும் 63E பிரிவு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பி க்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி கள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு அறிவுறுத்தியது. மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் ஸ்ரீராம், வள்ளியப்பன் மற்றும் கார்த்திகேயன் வாதாடினர். மனு தாரர் தரப்பில் ஆனந்தவல்லி என்பவ ரும் வாதிட அனுமதி கோரினார். ஆனால், ஏற்கனவே பல தரப்பு வாதங் களை முழுமையாக கேட்டுவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு கருத்துகளுக்கு ஆதாரப் பூர்வமான எதிர்க்கருத்துகள் உள்ளனவா என கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீராம், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மூன்று பக்க பதில் மனு தாக்கல் செய்வதாகதெரிவித்தார். இதனிடையே, ராம ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர் ஒருவர், தர்கா தரப்பு மலை உச்சியில், கோவிலின் தல விருட்சத்தை ஆக்கிரமித்து வருவதாக, புகைப்படங்களைக் காட்டிய புதிய குற்றச்சாட்டை எழுப்பினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தர்கா தரப்பு வழக் கறிஞர் மோகன், இந்த வாதங்களை ஏற்கக்கூடாது என்றும், இது உரி மையியல் நீதிமன்றம் சார்ந்த மனு என்றும் வாதிட்டார். அனைத்து தரப்பின ரின் வாதங்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கைத் தேதி குறிப்பி டாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.