அருந்ததியர் மக்களின் முன்னேற்றத்திற்கு தனி வாரியம்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>அருந்ததியர் மக்களின் முன்னேற்றத்திற்கு தனி வாரியம்</strong></p>
<p>கோவை, பிப்.16- அருந்ததியர் மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என திராவிட தமிழர் கட்சியின் அரசியல் மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை வ.உ.சி. மைதானத்தில் திராவிட தமிழர் கட்சியின் அரசியல் மாநாடு ஞாயிறன்று, அக்கட்சியின் தலைவர் வெண்மணி தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதி வேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண் டியன், திமுக எம்.பி., அந்தியூர் செல்வ ராஜ், தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன், திமுக மாநில மாண வரணி செயலாளர் ராஜீவ் காந்தி உள் ளிட்ட உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர். இதில், அருந்ததியர் சமூகத்திற் கான உள் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தி லிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண் டும். பஞ்சமி நில மீட்பு: தமிழகம் முழுவ தும் உள்ள பஞ்சமி நிலங்களை முழுமை யாக மீட்டெடுத்து பட்டியல் மற்றும் பழங் குடி மக்களுக்கு வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோ ருக்கு 100% ஜிஎஸ்டி (GST)யை ரத்து செய்ய வேண்டும். கோவையின் மத் திய பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இம்மாநாட்டில் முன்னாள் அமைச் சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கடந்த தேர்தலில் அருந்ததியர் மக்கள் அளித்த 68 சதவீத ஆதரவினால் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரா னார். இதன் மூலம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன. வரும் தேர்தலில் இந்த ஆதரவு 100 சதவீதமாக உயர வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் அருந்ததிய மக் கள் முழுமையாக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உரி மையோடு உங்களிடம் கேட்கிறேன். மேலும், உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழு வதுமிருந்து பங்கேற்றனர்.</p>
