தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

19 Mar 2026, 3:18 pm
பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு</strong></p> <p>சேலம், மார்ச் 19- தாய்லாந்தில் நடைபெற்ற பூப் பந்து போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீரருக்கு ஜங்ஷன் ரயில் நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. &nbsp;சேலம் மாவட்டம், இளம்பிள்ளை &nbsp;பகுதியை சேர்ந்தவர் சந்திப்குமார். &nbsp;பூப்பந்து விளையாட்டு வீரரான இவர், தாய்லாந்து நாட்டில் நடை பெற்ற போட்டியில் பங்கேற்றார். தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதியில் ஆசிய பூப்பந்து கூட்ட மைப்பு சார்பில் இந்தியா தாய்லாந்து &nbsp;டெஸ்ட் சீரிஸ் கடந்த மார்ச் 11 ஆம் &nbsp;தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பெற்றது. ஆண்கள் மற்றும் பெண் கள் என இரு பிரிவுகளில் நடந்த இந்த &nbsp;போட்டியில், ஆண்கள் பிரிவில் தாய் லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய சந்திப் குமார், ரயில் &nbsp;மூலம் வியாழனன்று சேலம் வந்த டைந்தார். சேலம் ஜங்ஷன் ரயில் &nbsp;நிலையத்தில் அவருக்கு குடும்பத்தி னர், கிராம மக்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆகியோர் பூங்கொத்து வழங்கி உற்சாக வர வேற்பு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர் களை சந்தித்து பேசிய சந்திப் குமார் &nbsp;கூறும்போது, கிரிக்கெட் போட்டிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல் பூப்பந்து விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். நான் அரசு &nbsp;பள்ளியில் படித்தேன்; ஆசிரியர்க ளின் உதவியால் தான் பயிற்சி பெற்று இந்த வெற்றியை அடைந் தேன். மேலும் ஆதரவு கிடைத்தால் &nbsp;நாங்களும் இன்னும் உயரத்திற்கு செல்ல முடியும் என்று தெரிவித் தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.