தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வறியா ஊழியரும் உத்வேகமூட்டும் கட்சி வரலாறும் - சேது சிவன்

23 Nov 2025, 3:44 pm
ஓய்வறியா ஊழியரும்  உத்வேகமூட்டும் கட்சி வரலாறும் -  சேது சிவன்
<p><strong>ஓய்வறியா ஊழியரும் &nbsp;உத்வேகமூட்டும் கட்சி வரலாறும்</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் என்.வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று நூல் அவர் மாநிலச் செயலாளராக இருந்த போதே தோழர் கே.பாலபாரதி அவர்களால் எழுதிய &ldquo;மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்&rdquo; என்ற புத்தகம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. &nbsp; புத்தகத்தை வாசிக்கத் துவங்கியது முதல் மிக சுவாரசியமான பல தகவல்களை தனது எளிய எழுத்து நடை மூலமாக கடத்துகிறார் தோழர் பாலபாரதி. இடதுசாரி இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரின் கதையும் மக்களின் கதையாக, சமூகத்தின் வரலாறாகத் தான் இருக்கும். அதே போலத் தான் தோழர் என்.வி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் அமைந்துள்ளது. புத்தகத்தின் துவக்கம் திண்டுக்கல் மாவட்டத்தின் புவியியல், வரலாறு, தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என பேசியதுடன், இப்புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் என்.வி.,யின் அனுபவம் ஆலோசனைகள், ஸ்தாபனம் பணிகுறித்தான பார்வை, போராட்டக் குணம், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல கட்சி தடை செய்யப்பட்டபோது என்.வி அவர்கள் தலைமறைவு வாழ்வில் நடத்த சில படபடப்பான விசயங்கள் கூட நகைச்சுவை நயத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. &nbsp;கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவாக இருந்த என்.வி சாப்பாட்டுக்குக் கூட வழி இல்லாமல் இருந்த போது வேறு வழியில்லாமல் ரகசியமாக தன் தந்தையிடம் கொஞ்சம் பணம்கொண்டு வரச் சொல்கிறார். அவரும் தன் மகன் சொன்ன இடத்துக்கு வருகிறார். அப்போது காவல்துறை தேடுதல் அதிகம் இருந்ததால் மாறுவேடத்தில் என்.வி வருகிறார். அடையாளம் தெரியாததால் தன்னை நோக்கி வருவது மகனா? போலீசா? என தெரியாமல் தந்தை முழித்துக் கொண்டிருக்க, நின்று பேசி விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் இருந்த என்.வி தன் தந்தை இடுப்பில் வைத்திருந்த பணப்பையை திருடன் போல பறித்துக்கொண்டு ஓடிய கதையும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. &nbsp; &nbsp; குறிப்பாக கட்சிப்பணிகள் முடித்து விட்டு இரவில் எவ்வளவு தாமதமாக வந்தாலும் என்.வி வீட்டுப்பாத்திரங்களை கழுவி வைக்கும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளார் என்பது முக்கியமான குடும்பப் பொறுப்புணர்வாகும். &nbsp;இது போன்ற பல விசயங்களையும், வரலாற்றுச் சம்பவங்களையும், அவரது அனுபவத்தை தாங்கி இருக்கும் இப்புத்தகம் சோர்வுள்ள மனதிற்கு உத்வேக மூட்டும் வகையில், வாசிப்பவரின் உள்ளத்துக்குள்ளே செல்லும் வகையிலான நடையில் அமைத்துள்ளது. இளம் தலைமுறை வாசிக்க வேண்டிய புத்தகம். மக்கள் சேவையில் மலர்ந்த &nbsp;தோழர் என்.வரதராஜன் &nbsp;ஆசிரியர் : கே.பாலபாரதி வெளியீடு : பாரதி புத்தகாலயம், பக்கங்கள் : 160/ விலை : 60 &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.