முந்தய பக்கம்

ஒரு மறுப்புத் திருமணம்! - வரத.இராஜமாணிக்கம்

24 Jan 2026, 1:00 pm
ஒரு மறுப்புத் திருமணம்! -  வரத.இராஜமாணிக்கம்
<p><strong>ஒரு மறுப்புத் திருமணம்!</strong></p> <p>அவளுக்கு யாரும் &nbsp;இல்லாமல் போய்விட்டார்கள் &nbsp;அதுவும் அவளது &nbsp;கல்யாணத்தின் பொழுது ! &nbsp; தாலி ஏறும் முன் சுற்றிலும் &nbsp;ஒருமுறை பார்த்துக் கொண்டாள் &nbsp;அம்மாவைப் போலவோ &nbsp; உடன்பிறந்த சகோதர சகோதரிகளைப் போலவோ எவரும் தென்படுகிறார்களா என்று! &nbsp; &nbsp;மிகச்சிறுமியாய் இருக்கையில் &nbsp;இறந்து போன அப்பாவின் முகத்தை &nbsp;சிரமத்துடன் நினைவு கூர்ந்து தோற்றுப் போனாள்! &nbsp;அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள் அவளுக்கு அப்பாவின் முகச்சாடையாம்! &nbsp;இப்பொழுது அவள் முகமே &nbsp;அவளுக்கு தொலைந்து போனது போலிருந்தது! அன்று கோவில் வாசலில் &nbsp;அவளைப் போலவே நிறையப் &nbsp;பெண்களுக்கு திருமணம் நடந்தது. &nbsp; எந்தப் பெண்ணுக்கும் &nbsp;அப்பாவோ அம்மாவோ &nbsp;சகோதரனோ சகோதரியோ இல்லாமல் &nbsp;திருமணம் நடக்கவில்லை என்றே அவளுக்கு தோன்றியது. &nbsp;பெரும் கேவலுடன் அவளுக்கு அழுகை வந்த பொழுது &nbsp;அவன் தாலி கட்டி &nbsp;முடித்திருந்தான்! &nbsp;தாலி அணிவித்தவனின் &nbsp;கங்கணம் கட்டிய கைகளின் &nbsp;நீண்ட விரல்களுக்கு இடையே &nbsp;அவளது வாழ்க்கை &nbsp;மேடும் பள்ளமுமாகத் தெரிந்தது. &nbsp;புகைப்படம் எடுப்பவர் &nbsp;ஒருமுறை இருவரையும் &nbsp;ரிக்கச் சொல்லி அழைத்தார். &nbsp;அவனும் தன் உதிர உறவுகளை தேடி ஏமாந்திருப்பான் போல.. &nbsp;அவள் முகம் பார்த்தவன் &nbsp;இருவரும் ஏன் சிரிக்கக் கூடாது என்றான்!</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram