அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்கு சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சை வெற்றி!
19 Feb 2026, 3:09 pm
<p><strong>அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்கு சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சை வெற்றி!</strong></p>
<p>சென்னை, பிப்.19- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதயத்திலிருந்து உடல் முழுவதும் ரத்தத்தைச் சுமந்து செல்லும் முக்கியக் குழாயான ‘ஏர்ட்டா’ (Aorta) பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை யில் வந்த இருவருக்கு, 25 நாட்களுக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுவாழ்வு அளிக்கப் பட்டுள்ளது. அரிய வகை நோய் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், கடுமையான வயிற்று வலியுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றுப் பகுதியில் இருந்த முக்கிய ரத்த நாளம் பலூன் போல வீங்கி, அது வெடிக்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வீக்கம் மேல்நோக்கிப் பரவி நுரையீரலை அழுத்தியதால் அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மருத்துவர்கள் சற்றும் தாமதிக்காமல் அவருக்கு ‘ஹைப்ரிட் ஏர்ட்டிக் ரிப்பேர்’ என்ற நவீன சிகிச்சையை மேற்கொண்டனர். முதலில் திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் குடல் மற்றும் சிறு நீரகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மாற்றுப் பாதைக்கு மாற்றினர். பின்னர், தொடைப் பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு அதன் வழியாக நவீன ஸ்டென்ட் கருவியைப் பொருத்தி பாதிப்பைச் சரிசெய்தனர். தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வருகிறார். ரத்தக் கசிவிலிருந்து மீட்கப்பட்ட பெண் 45 வயதான குப்பம்மாள் என்ற பெண் நெஞ்சு வலி மற்றும் ரத்த வாந்தியுடன் மருத்துவமனைக்கு வந்தார். ஏற்கெனவே காசநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நெஞ்சுப் பகுதியில் இருந்த ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் கசியத் தொடங்கியது கண்டறியப்பட்டது. இது ஒரு மிக இக்கட்டான நிலை என்றாலும், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் துரிதமாகச் செயல்பட்டு அவரது தொடைப் பகுதியில் இரு சிறிய துளைகளை இட்டு, நவீன ஸ்டென்ட் முறையின் மூலம் ரத்தக் கசிவை வெற்றிகரமாக நிறுத்தி னர். தற்போது அவர் நலமுடன் தனது வழக்கமான சிகிச்சையைத் தொடர்கிறார். ஸ்டான்லி மருத்துவமனையின் உயர்தரச் சேவை தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.20 முதல் 30 லட்சம் வரை செல வாகும் இந்தச் சிக்கலான உயர்தர சிகிச்சைகள், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. எளிய மக்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவை தடையின்றி கிடைப்பதை இந்தச் சாதனை உறுதிப்படுத்தியுள்ளது. சவாலை வென்ற மருத்துவக் குழு இந்தச் சாதனையை நிகழ்த்திய பேரா சிரியர் டாக்டர் க. இளஞ்சேரலாதன் தலை மையிலான மருத்துவக் குழுவை மருத்து வக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ. அரவிந்த் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டி னர். இந்த உயரிய சிகிச்சைகளை ரத்த நாள அறுவை சிகிச்சைத்துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் க. இளஞ்சேரலாதன் தலை மையில், உதவி பேராசிரியர்கள் டாக்டர் டி. ராஜ்குமார், டாக்டர் வி.ஜி. விக்ரமன் மற்றும் டாக்டர் வி. ராதாகிருஷ்ணா ஆகியோர் மேற்கொண்டனர். இவர்க ளுடன் மயக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் வி.ஜே. கார்த்திக் மற்றும் பேராசிரியர் டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். ஆர்எம்ஓ டாக்டர் வனிதா மலர் மற்றும் மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.</p>
