தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரையை விரைந்து அளிக்க வேண்டும்!

25 Mar 2026, 5:29 pm
ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரையை விரைந்து அளிக்க வேண்டும்!
<p><strong>ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரையை விரைந்து அளிக்க வேண்டும்!</strong></p> <p>சென்னை, மார்ச் 25 &ndash; தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்று வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா &nbsp;தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், அந்த ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு ஒன்றை அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள &nbsp;இந்த ஆணைய அலுவலகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் சந்தித்து &nbsp;மனுவை அளித்தார். ஆணைய உறுப்பினர்கள் வி. பழனி குமார், எஸ். ராமநாதன், ரவீந்திரபோஸ் மற்றும் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் &nbsp;கே. சாமுவேல்ராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, வழக்கறி ஞர்கள் எஸ். சிவக்குமார், உதயக்குமார் ஆகி யோர் உடனிருந்தனர். இதன்பின் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. &nbsp;சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனிநபர் மசோதா கொண்டு &nbsp;வந்த சிபிஎம் ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் கோரி நீண்ட காலமாக போராடி வரு கிறோம். இதற்காக, 2015-ஆம் ஆண்டு தமிழக &nbsp;சட்டமன்றத்தில், அன்றைய சிபிஎம் சட்ட மன்றக்குழுத் தலைவராக இருந்த அ. சவுந்தர ராசன் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக சார்பில் பதிலளித்த ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஆணவக் கொலையே &nbsp;இல்லை; எனவே தனிச்சட்டம் தேவை யில்லை, என்றார். தனிச்சட்டம் கோருகிறபோதெல்லாம் இன்றைய திமுக அரசும் கூட, கொலை களைத் தடுக்கவும், அப்படி கொலை நடந்தால் தண்டனை தரவும் பலச் சட்டங்கள் &nbsp;நடைமுறையில் உள்ளது. எனவே, தனிச் சட்டம் தேவையில்லை என்று கூறியது. நீண்ட போராட்டத்தால் &nbsp;ஆணையம் அமைப்பு ஆனால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆணவக் கொலைகள் நடந்த நிலையில் நானும், விசிக தலைவர் தொல். திருமாவள வன், சிபிஐ-யின் அன்றைய மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன் ஆகியோரும் சேர்ந்து, &nbsp;முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்தோம். கொலைகளுக்கும் ஆணவக் கொலைக்கும் உள்ள வித்தியாசத்தையும், அதனால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பாதுகாப்பற்ற நிலைமையையும் எடுத்துரைத்தோம். அதனை &nbsp;ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், ஒரு தனிச் &nbsp;சட்டத்தை இயற்றுவதற்கான ஆணை யத்தை அமைப்பதாகக் கூறினார். அதனடிப் படையில் நீதிபதி கே.என். பாஷா தலைமை யில் ஆணையம் அமைத்திருப்பது வரவேற்கத் தக்க நடவடிக்கை. விரிவான பரிந்துரைகளை வழங்கியுள்ளோம் இன்றைய தினம் ஆணையத்தில் மனு அளித்து ஆணையத்தோடு விவாதித்தோம். தனிச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், ஏற்கெனவே உள்ள திருமணச் சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங் கள் உள்ளிட்ட விரிவான ஆலோசனை மற்றும் &nbsp;பரிந்துரைகளை வழங்கினோம். குறிப்பாக, ஆணவக்கொலையால் பாதிக்கப்படக் கூடியவர்கள் தங்க இடமின்றி, &nbsp;பல நேரங்களில் எங்களைப் போன்ற கட்சி &nbsp;அலுவலகங்களில்தான் தங்க வைக்கப்படு கின்றனர். ஒருவர் விரும்பிய இணையைத் தேர்வு &nbsp;செய்து திருமணம் செய்து கொள்வதை அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் &nbsp;சாசனத்தின் 19-ஆவது பிரிவு அங்கீகரிக் கிறது. அந்த அடிப்படை உரிமையை தடுக்கும் வகையில் ஆணவக் கொலை நடக்கிறது. இதில், பாதிக்கப்படுகிறவர்கள் பாதுகாப்பாக தங்கவும், அவர்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை பாதுகாக்க வும் அரசு நிரந்தரமான வேலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை செய்ய வேண்டி உள்ளது. அரசியலமைப்புக்கு &nbsp;எதிரான பிரிவுகள் மதம் மாறித் திருமணம் செய்து கொள்ளக் &nbsp;கூடியவர்கள் 30 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன்மீது &nbsp;பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் &nbsp;என்று சிறப்பு திருமணச் சட்டம்-1954, பிரிவு 5, &nbsp;6 கூறுகிறது. இந்த பிரிவுகள், அரசியல் சாச னத்தின் பிரிவு 19-க்கு விரோதமானது. எனவே, &nbsp;பிரிவு 5 மற்றும் 6-ஐ நீக்க வேண்டும். இதுபோன்று பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை ஆணையத்திற்கு கொடுத்து உள்ளோம். நீதிபதி கே.என். பாஷா மிகச் சிறந்த நீதிபதியாக பணியாற்றியவர். எனவே, &nbsp;ஒரு மிகச் சிறந்த சட்டத்தை ஆணையம் உருவாக்கித் தரும் என்று நம்புகிறோம். ஆணவக் கொலையில் ஈடுபடக்கூடி யவர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தையும், இனிமேல் அத்தகைய செயலில் ஈடுபடக் &nbsp;கூடாது என்ற நிலைமையையும் உருவாக்கக் கூடிய வகையில் அந்தச்சட்டத்தை விரைந்து &nbsp;கொண்டு வருமாறு கோரியுள்ளோம். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.