தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றைப் படிக்க ஓர் அரிய நூல் - உ. வாசுகி

9 Nov 2025, 2:37 pm
இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றைப் படிக்க ஓர் அரிய நூல் - உ. வாசுகி

இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றைப் படிக்க ஓர் அரிய நூல்

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் எழுச்சி மிகு வரலாற்றின் உச்சங்களை ஒரே நூலில் அறிந்துகொள்ள விரும்பினால், மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பி. சம்பத் எழுதிய இந்த நூலே பொருத்தமானது. கனவுத் தொழிற் சாலை போல அரசியலைக் கருதும் இக்காலத்தில், வீரச்சமர் புரிந்து, தியாகத் தழும்புகளை ஏற்று, உயிர்த் தியாகம் செய்து மக்களுக்காகப் போராடுவதை உணர்விலும் உதிரத்திலும் உள்வாங்கிப் பறக்கும் செங்கொடியின் வரலாறு பிரமிப்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.

இது கம்யூனிஸ்டுகளின் வரலாறு மட்டுமல்ல; விடுதலைப் போராட்ட வரலாறு, தேசத்தின் வர லாறு, இந்திய அரசியலின் வரலாறு ஆகும். ஆனால், வரலாற்றுப் பாடங்களில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் தியாகமும் திட்டமிட்டுப் புறக்கணிக் கப்படுவதே வாடிக்கையாக உள்ளது. கம்யூனிச எதிர்ப்பு என்று வரும்போது, கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் வர்க்க அடிப்படையில் வானவில் கூட்டணியாகவே நிற்கிறார்கள்.

விடுதலைப் போராட்டமும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும்

இந்நூலில் வரும் பல்வேறு விவரங்கள், கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் முதலில் சரியான நிலை பாட்டை உருவாக்கியது கம்யூனிச இயக்கம் தான் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பூரண சுதந்திரம், தேசிய இனப்பிரச்சினை, சாதி ஒழிப்பு, வகுப்பு வாதம், தேசப் பிரிவினை, பாலின சமத்துவம், சிறு பான்மையினர் உரிமைகள் என பல உதாரணங் களைக் கொடுக்க முடியும். பாடநூல்கள், இந்திய சுதந்திரம் கத்தி இன்றி இரத்தம் இன்றிப் பெறப்பட்ட தாகப் புனைவுகளைப் பரப்பினாலும், உண்மை அதற்கு நேர்மாறானது.

கம்யூனிச இயக்கத்தின் ஆரம்பம்

1920-இல் தாஷ்கண்ட் நகரில் உருவான இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளையில் இருந்த ஏழு பேரில் இருவர் பெண்கள், இருவர் இஸ்லா மியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேச விடுதலை, புரட்சிகர உணர்வும் கொண்டு, நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இச்சிறு  குழு, இந்திய பொருளாதாரம், அரசியல், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த பங்களிப்பைச்செய்தது.

எம்.என். ராய் அவர்கள் வகுப்புவாதப் பிரச்சனை குறித்தும், காந்தி குறித்தும் எழுதியது (India in transition) மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ரஜனி பாமி தத் எழுதிய மாதாந்திர குறிப்பு (India Today) ஆகிய இரண்டும் இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு அடிப்படை பாடநூல்களாகவும், கட்சியின் சித்தாந்த அஸ்திவாரமாகவும் அமைந்தன.

வகுப்புவாதத்திற்கான முறிவு வர்க்க ஒற்றுமை தான் என்று எம்.என். ராய் 1920களின் துவக்கத்திலேயே வலியுறுத்தினார். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அனைத்து சாதி மற்றும் மதங்களில் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எழுதினார்.

தேசம், தேசிய இனம் மற்றும் மாநில உரிமைகள்

முகமது அலி ஜின்னா இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்தபோது, கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்த னர். அதே சமயம், காங்கிரஸ் இந்தியா என்கிற ஒரு தேசக் கோட்பாட்டை முன் வைத்தது. ஆனால், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்டது; மொழி வழி மாநிலங்கள் தேவை என்ற கோட்பாட்டைக் கம்யூ னிஸ்டுகளே முன்மொழிந்தனர். இதன் நீட்சியாகவே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டங்கள் அதிகபட்ச மாநில உரிமைகளை வலியுறுத்துபவையாக அமைந் தன. மாநில உரிமைகளுக்கான தத்துவார்த்த அஸ்தி வாரத்தை கம்யூனிச இயக்கமே உருவாக்கியது.

கட்சியின் 9வது மாநாட்டில், “இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை” என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய உபகண்டம்  ஒரே தேசம் என்ற உணர்ச்சிவசத் தத்துவம், இந்து நாடு, முஸ்லிம் நாடு என்ற வகுப்புவாதத் தத்துவம் இரண்டுமே உண்மைக்குப் புறம்பானவை என்று வரையறுத்தது.

இந்திய ஒன்றியத்தில் ஒரு தேசிய இனம் மற்றொன்றை ஒடுக்கும் சூழல் இல்லை என்றும், நடக்கும் போராட்டங்கள் பொருளாதார சார்புத் தன்மையை ஒழித்துக் கட்டுவதற்கான பொதுப் போராட்டம் என்றும் தெளிவுபடுத்தியது. எனவே, பிரிந்து போகும் உரிமை எனப்படும் பிரச்சனை இங்கு எழவில்லை என்றும், பிரிவினைவாதம் ஆளும் வர்க்கங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும்தான் உதவும் என்ற தெளிவான முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தது.

புரட்சிகரப் போராட்டங்களும் தியாகங்களும்

நிலத்துக்கான உரிமைப் போராட்டங்களுக்குச் செங்கொடி இயக்கம் மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்ற பிறகு, போராட்டங்களின் தன்மை நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான, காலனி ஆதிக்கத்துக்கு எதிரான புள்ளியில் இணையும். தெலுங்கானா, தேபாகா, புன்னப்புரா வயலார், வார்லி ஆதிவாசி போராட்டங் கள் ஆகியவை இந்த உண்மையை வெளிப்படுத்து கின்றன. கம்யூனிஸ்டுகள் சுதந்திர தாகத்தை எழுப்பிய தோடு, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் வளர்த்தனர்.

கப்பற்படை எழுச்சிக்குக் கம்யூனிஸ்டுகள் அளித்த ஆதரவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தொழிலாளி வர்க்கம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆதரவு அளிக்கக் கட்சி வழிகாட்டியது. காங்கிரசும், லீகும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்களின் ஆதரவு மகத்தானதாக இருந்தது.

சுரண்டல் ஒழிப்பு, தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் உரிமைக்காக கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடந்த முத்திரை பதித்த போராட்டங் களும், கையூர் தியாகிகளின் வீரம் செறிந்த வரலாறும் விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாமும் சேர்ந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இந்தியாவை விட்டு வெளியேற வைத்தது.

சிறைச்சாலையை  கோட்டைகளாக்கிய ரசவாதம்

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொண்டு, சிறைச்சாலைகளை வர்க்கப் போராட்டக் கோட்டைகளாகவும், நீதிமன்றங்களைப் பிரச்சார மேடைகளாகவும் மாற்றிய ரசவாதம் கம்யூனி ஸ்டுகளிடம் இருந்தது. இந்த நூல் அந்தப் பணியைச் செய்து உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

சித்தாந்தப் போராட்டங்களும் தேர்தல்களும்

1952, 1957, 1962 உள்ளிட்ட பொதுத் தேர்தல்கள், அவற்றில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. கம்யூனிஸ்டுகளை சீன ஏஜென்டுகள் என்று திட்டமிட்டு முத்திரை குத்துவதற்கு நாம் சொல்ல வேண்டிய பதில் இந்நூலில் கிடைக்கிறது.

1962 இந்திய சீன எல்லைப் பிரச்சனை குறித்து, தோழர் இராமமூர்த்தி, இ.எம்.எஸ் மற்றும் பூபேஷ் குப்தா ஆகியோர் முன்வைத்த அறிக்கை, சமாதானபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தவே வலியுறுத்தியது. இன்று நடப்பது இந்திய-சீனப் பேச்சுவார்த்தைதான். அன்றைக்கு அதையே சொன்னதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியக் கம்யூனிச இயக்கத்திற்குள் திருத்தல் வாதத்தை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தது. இந்திய அரசின் வர்க்கத் தன்மை, இந்தியப் புரட்சியின் வரையறுப்பு போன்ற அடிப்படை  அம்சங்களில் கருத்து வேறுபாடு தொடர்ந்தது. இதை ஒட்டி 1964 ஏப்ரலில் நடந்த தேசிய கவுன்சிலின்போது 32 உறுப்பினர்கள் வெளியேறினார்கள். சி.பி.ஐ(எம்) உதயமானது வரையிலான விவரங்கள் இந்நூலில் உள்ளன.  பொதுத்துறை உருவாக்கமும், அது பலவீனப் படுத்தப்படுவதும் இரண்டிற்கும் பின்னால் முத லாளித்துவ வர்க்க நலன் தான் உள்ளது என்பதை இந்நூல் மிகச் சிறப்பாக விவரிக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் ஆட்சிகள், காட்சிகள் எவற்றையும் மாற்றிவிடவில்லை. காட்சிகள் மாற வேண்டுமானால் சோசலிச அமைப்பு முறை நிறுவப்பட வேண்டும். இந்தச் சிறப்பான நூல், அது நடக்கும் என்கிற நம்பிக்கையைப் புதியவர்களிடம் விதைக்கிறது.

நாம் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்வோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.