தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்!

13 Jan 2026, 3:17 pm
வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்!
<p><strong>வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்!</strong></p> <p>புதுதில்லி, ஜன. 13 - வெனிசுலாவுக்கு அத்துமீறி நுழைந்து, ஜனாதிபதி மதுரோ வையே கடத்திச் சென்று சிறை வைத்ததுடன், வெனிசுலாவின் எண் ணெய் வளங்களையும் அப கரிக்கப் போவதாக அமெரிக்க &nbsp;ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள் ளார். சர்வதேச சட்டங்களை மீறி, &nbsp;இத்தகைய அடாவடியில் ஈடுபட்டுள்ள &nbsp;அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. &nbsp;இந்நிலையில், இந்திய அர சியல் கட்சிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைநகர் புது தில்லியில் நடைபெற்ற வெனிசுலா ஒருமைப்பாட்டு கூட்டத்தில், தங்க ளின் கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளனர். &nbsp;இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட் டிருப்பதாவது: வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள் வெனிசுலா மீதான அமெரிக்கா வின் ஆக்கிரமிப்பு மற்றும் வெனி சுலா மக்களால் ஜனநாயக ரீதியாகத் &nbsp;தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் சதித்திட்டம் தீட்டி &nbsp;கடத்திய சம்பவம் ஆகியவற்றைக் கண்டித்தும், வெனிசுலா மக்க ளுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் விரிவான கூட்டம் ஒன்று, திங்கட்கிழமையன்று புது தில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், எம்.ஏ. பேபி, இந்தியக் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், து. ராஜா, &nbsp;இந்தியக் &nbsp;கம்யூனிஸ்ட் (எம்-எல்-லிபரேசன்) கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ரவி ராய், அகில இந்திய &nbsp;பார்வார்ட் பிளாக் பொதுச்செயலா ளர் ஜி. தேவராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் மத்திய செய லக உறுப்பினர் ஆர்.எஸ். டாகர், &nbsp;திமுக மாநிலங்களவை உறுப்பினர் &nbsp;திருச்சி சிவா, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சமாஜ் வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் &nbsp;ஜாவேத் அலி கான், ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பி னர் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் பதக் முதலானவர்கள் பங் கேற்று கண்டன உரையாற்றினர். அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒருமனதாக கண்டனம் உரையாற்றிய அனைவரும் வெனிசுலாவுக்கு எதிரான அமெ ரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை ஒருமனதாகக் கண்டித்தனர். இது சர்வதேசச் சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் தேசிய இறையாண்மை ஆகிய கொள்கைகளை கடுமை யாக மீறியதாகும் என்று அவர் கள் விவரித்தனர். ஓர் இறை யாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடு வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை அகற்றுவதற்கோ அல்லது கடத்துவதற்கோ சதித் திட்டம் தீட்டுவதும் முழு உல கிற்கும் ஒரு ஆபத்தான முன்னு தாரணத்தை அமெரிக்கா ஏற்படுத்தி யுள்ளது என்று கவலை தெரிவித்த னர். இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரான பிரகாஷ் காரத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில், நீதிக்கும் மேலாக வலிமை நிலைநிறுத்தப்படும் இக்காலத்தில், ஜனநாயக மற்றும் &nbsp;முற்போக்கு சக்திகள் தெளிவாக வும் தைரியமாகவும் குரல் கொடுப் பது அவசியம் என்று வலியுறுத்தி னார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்ப திலும் இறையாண்மையைப் பாது காப்பதிலும் இந்திய மக்களுக்கு &nbsp;ஒரு பெருமைமிக்க பாரம்பரியம் &nbsp;உண்டு என்றும், அந்தப் பாரம்பரி யம் இன்று நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நினைவு படுத்தினார். அமெரிக்க ஆக்கிரமிப்பை &nbsp;இந்தியா கண்டிக்க வேண்டும்! வெனிசுலாவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றும் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அமெரிக்க ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டித்தது, வெனிசுலா மக்க ளுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்தது. மேலும் இந்திய அர சாங்கம் ஒரு சுதந்திரமான, கொள்கை அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையைப் பின் பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. வெனிசுலா, கியூபா மற்றும் பாலஸ்தீன மக்களின் பக்கம் வெளிப்படையாக நின்று, அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண் டிக்க வேண்டும் என்றும் அது ஒன் றிய அரசாங்கத்தை வலியுறுத்தியது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்பவும், அமைதி, இறை யாண்மை மற்றும் சர்வதேசச் சட்டத் தைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்கவும் இந்திய மக்களை இக்கூட்டம் கேட்டுக்கொண்டது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது. (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.