வீதி நாடகப் போராளி சப்தர் ஹஷ்மி
1 Jan 2026, 4:14 pm
<p>நாடகக் கலை மூலம் மக்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தவர் சப்தர் ஹஷ்மி. ‘ஜன நாட்டிய மஞ்ச்’ குழுவை உருவாக்கி, ஆயிரக்கணக்கான வீதி நாடகங்களை நடத்தியவர். 1989 ஜனவரி 1 அன்று உத்திரப்பிரதேசத்தில் ‘ஹல்லா போல்’ நாடகத்தை அரங்கேற்றியபோது, அரசியல் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஜனவரி 2-ல் அவர் மறைந்தார். அவரது மரணம் இந்திய கலை உலகில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்களின் உரிமைகளுக்காகத் தம் உயிரையே ஈந்த கலைஞர் அவர்.</p>
