தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாழவேடு பழங்குடி மக்களின் கிராமத்தில் மர்ம கும்பல் புகுந்து மக்கள் மீது தாக்குதல்

21 Jan 2026, 3:58 pm
தாழவேடு பழங்குடி மக்களின் கிராமத்தில் மர்ம கும்பல் புகுந்து மக்கள் மீது தாக்குதல்
<p><strong>தாழவேடு பழங்குடி மக்களின் கிராமத்தில் மர்ம கும்பல் புகுந்து மக்கள் மீது தாக்குதல்</strong></p> <p>திருவள்ளூர், ஜன.21- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள தாழவேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். &nbsp;இந்த நிலையில் பொங்கல்திருநாளன்று (ஜன.16) &nbsp; இரவு 6 பேர் கொண்ட ஒரு கும்பல் தாழவேடு இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆரவாரத்துடன் நுழைந்துள்ளது. இதனை கண்ட முதியவர் ராமசாமி என்பவர் அவர்களை நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் &nbsp;என்று கேட்டுள்ளார். உடனே அந்த கும்பல் ராமசாமியை கம்பி மற்றும் உருட்டை கட்டையால் தாக்கி யுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் திருத்தணியில் முதலுதவி செய்து பிறகு அன்று இரவே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வந்த கும்பல், வீட்டின் கதவுகளை, தெரு குழாய்கள், விளக்குகளை என அனைத்தை யும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி யுள்ளனர். இதனால் அந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.பின்னர் &nbsp;திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்துள்ளனர். தாழவேட்டில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில், தெரு விளக்குகள் ஏதுமில்லாமல் இருளில் வாழ்கிறார்கள். சமூக விரோதிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடுகிறது, இங்கு உடனடியாக தெருவில் உள்ள மின் கோபுரத்தில் மின் விளக்கு பொறுத்த வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் சிபிஎம் வட்ட செயலாளர் வி.அந்தோணி வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் உடனடியாக அப்பகுதிமக்களை தாழவேடு கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். தெரு விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்திருந்தார். உறுதியளித்ததின் பேரில் உடனடியாக தாழவேடு இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு புதிய மின்கம்பங்கள் நட்டு தெரு விளக்குகள் பொறுத்தும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகிறது. மேலும் நடமாடும் ரேசன் கடை அமைக்க வும், &nbsp;சிசிடிவி கேமிரா பொருத்தவும், &nbsp;காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து வரவும், அதற்காக &nbsp;நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இது குறித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் &nbsp;சி. பெருமாள், திருத்தணி வட்ட செயலாளர் வி.அந்தோணி ஆகியோர் கூறும் போது, தாழவேடு கிராமத்தில் சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்ட ராமசாமி குடும்பத்தை பாது காக்க வேண்டும், ஏழ்மையான அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு சென்றாலும் பாதிக்கப்படுவது இருளர் இனத்தை சேர்ந்த வர்களும் மற்றும் தலித் மக்களைத்தான் உள்ளனர் மிகவும் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. இதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது வட்டக் குழு உறுப்பினர்கள் சின்ன பையன், செல்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.