தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் வாசகர் சிந்தனைப் பேரவை சார்பில் மகாகவி பாரதி மண்ணிற்கு இலக்கியப் பயணம்

12 Dec 2025, 3:12 pm
திருப்பூர் வாசகர் சிந்தனைப் பேரவை  சார்பில் மகாகவி பாரதி மண்ணிற்கு இலக்கியப் பயணம்
<p>திருப்பூர், டிச. 12 - மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் வாசகர் &nbsp;சிந்தனைப் பேரவை அமைப்பினர் கடந்த வாரம் எட்டயபுரத்துக்கு இலக்கி யப் பயணம் மேற்கொண்டனர். திருப்பூர் வாசகர் சிந்தனைப் பேர வையின் டிசம்பர் மாத அமர்வு, இலக்கி யப் பயணத்துடன் தொடங்கியது. கே.வி &nbsp;டிரான்ஸ்போர்ட் இணைந்து மாதந்தோ றும் நடத்தும் வாசகர் சிந்தனைப் பேரவை &nbsp;நிகழ்வின் 35ஆவது அமர்வு, இலக்கியப் &nbsp;பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டது. &nbsp;மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிக்கு விழா எடுக்க எட்ட யபுரம் நோக்கிப் பயணம் சென்றனர். பய ணக் குழுவினரை, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பரா யன், கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகி பி.ஆர்.நடராஜன், ஏவிபி லே &nbsp;அவுட் குடியிருப்போர் நலச் சங்கத் &nbsp;தலைவர் டி.என்.துரை ஆகியோர் வழிய னுப்பி வைத்தனர். 25 பேர் சென்ற வாக னத்தில், பயணத்தின்போது அனைவ ரும் தாங்கள் படித்து ரசித்த நூல்கள் பற் றியும், தமிழ் நூல்களின் சிறப்பு குறித் தும் வார்த்தை விளையாட்டு மற்றும் &nbsp;வினாடி வினா போன்ற பல சுவையான &nbsp;நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர். &nbsp;முதலில் எட்டயபுரம் பாரதியார் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு புதுப்பித்தல் பணிகள் நடந்து &nbsp;கொண்டிருந்தாலும், அதன் பொறுப்பா ளர், பயணக்குழுவினரின் வேண்டு கோளை ஏற்று, பாரதி குடியிருந்த இல் லத்தை சுற்றி காண்பித்து சிறப்புகளை விளக்கினார். பின்னர் பாரதி மணி மண்டபத்தில் நடைபெற்ற படிப்போம், பகிர்வோம் மாதாந்திர அமர்வில் தென்சென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் எழுத்தா ளர் ஜீவரேகா சிறப்புரை நிகழ்த்தி னார். வெள்ளியங்கிரி வரவேற்றார். தங்க பூபதி, முத்து பாரதி, குட்டி கிரு ஷ்ணன், இந்துமதி, அபிஜிதா ஆகி யோர் பாரதியின் சிறப்புகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். அருண் குமார் நன்றி கூறினார். &nbsp;இதையடுத்து பாரதியார் மணி &nbsp;மண்டபத்தை சுற்றி பார்த்து பல்வேறு &nbsp;அரிய தகவல்களை தெரிந்து கொண்ட னர். இதன் பிறகு பாரதியார் கவி பாடிய &nbsp;எட்டயபுரம் கோட்டையைச் சென்று பார்த்தனர். தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் இருந்த காரணத்தால் பொது வாக அனுமதி இல்லை. எனினும் பாரதி &nbsp;விழா நடந்து கொண்டிருந்ததால் அனை வருக்கும் கோட்டை நுழைவாயில் வரை அனுமதி வழங்கப்பட்டது. இங்கு &nbsp;பாரதியின் மார்பளவு சிலை திறப்பு விழா வும், பல்லக்கில் அவருடைய சிலை ஊர் வலம் எடுத்துச் சென்று அவரது கனவு &nbsp;நிறைவேற்றப்பட்டது. &nbsp;பின்னர், பாஞ்சாலங்குறிச்சி சென்று, கட்டபொம்மன் நினைவு கோட்டை அமைப்பை சுற்றிப் பார்த்த னர். அங்கே அமைந்துள்ள ஜக்கதேவி ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு திருப்பூர் திரும்பினர். திரும்பி வரும்போது வாகனத்தில் பண்டிகை விழாச் செலவுகள் அவசி யமா? &nbsp;அனாவசியமா? &nbsp;என்கிற தலைப் பில் பட்டிமன்றம் மற்றும் பாட்டுக்கு பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. ஒருங்கிணைப்பாளர் தங்க பூபதி மற்றும் எழுத்தாளர் முத்துபாரதி மற்றும் &nbsp;கே.வி. குரூப் நிறுவனங்களின் கே. வெள்ளிங்கிரி ஆகியோர் இந்த இலக்கி யப் பயண ஏற்பாட்டைச் செய்திருந் தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.