ஒரே நாளில் அம்பலமான பொய்முகம்! ஈசன் முருகசாமியின் ‘நோட்டா’ அந்தர் பல்டி!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>ஒரே நாளில் அம்பலமான பொய்முகம்! ஈசன் முருகசாமியின் ‘நோட்டா’ அந்தர் பல்டி!</strong></p>
<p>“ஊருக்கே உபதேசம், தனக்கு வந்தால் அந்தர் பல்டி” என்ற கதையாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியின் அரசியல் சாயம் ஒரே நாளில் வெளுத்துப்போய் அம்பலமாகி நிற்கிறது! ‘நோட்டாவுக்குப் போடுங்க!’ 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காமல் புறக்கணியுங்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள், நோட்டாவுக்குக் கூட ஓட்டுப் போடுங்கள் என்று மார்தட்டி வீடியோ பேட்டி கொடுத்தார் ஈசன் முருகசாமி. விவசாயிகளை வஞ்சிக்கும் கொள்கைகளைக் கொண்ட கார்ப்பரேட் அடிவருடி பாஜகவையோ, முந்தைய அதிமுக ஆட்சியின் விவசாயிகளுக்கு எதிரான போக்கையோ இவர் ஏன் விமர்சிக்கவில்லை என்று மார்ச் 23 அன்று ‘தீக்கதிர்’ நாளேடு துல்லியமாகத் தனது விமர்சனக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தது. தீக்கதிர் மீது வசைபாடல்! இதனால் ஆத்திரமடைந்த ஈசன் முருகசாமி, மார்ச் 24 அன்று தீக்கதிர் நாளேட்டையும், அதை எழுதியவரையும் வசைபாடி காரசாரமாகப் பதில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில், “நான் விவசாயிகளுக்குத் துரோகம் செய்பவன் அல்ல” என்று வீராவேசமாகப் பேசினார். சுயரூபம் அம்பலம்! ஆனால், அடுத்த நாளே (மார்ச் 25) அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும், எடப்பாடி பழனிசாமி அறிவித்த இலவசங்களைப் பார்த்து அப்படியே குஷியாகிவிட்டார்! உடனே எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தனது ஆதரவையும் சங்கத்தின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். திமுகவைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், நோட்டாவுக்குப் போடுங்கள் என்று நடுநிலை வேடம் போட்டவர், வீடியோ வெளியிட்ட அடுத்த நாளே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை ஆதரிப்பதன் மூலம் தனது சுயரூபத்தைத் தானே அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயிகளுக்குத் துரோகமான அரசியல் நிலைப்பாட்டை ஈசன் முருகசாமி எடுத்துள்ளார் என்று தீக்கதிர் விமர்சித்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவரது செயல்பாடே நிரூபித்துக் காட்டியுள்ளது!</p>
