20 வருட முக்கிய இலாகாவும் பறிபோனது; பொம்மை முதலமைச்சரானார் நிதிஷ் குமார் பீகாரில் பாஜக கை ஓங்குவதால் ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் போர்க்கொடி
22 Nov 2025, 4:09 pm
<p><strong>20 வருட முக்கிய இலாகாவும் பறிபோனது; பொம்மை முதலமைச்சரானார் நிதிஷ் குமார் பீகாரில் பாஜக கை ஓங்குவதால் ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் போர்க்கொடி</strong></p>
<p>பாட்னா வாக்குத் திருட்டு, ரூ.10,000 உதவி நிதி (லஞ்சம்), தேர்தல் ஆணையம் - பாஜக கள்ளக் கூட்டணியின் சதி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து நவம்பர் 20ஆம் தேதியன்று ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார் 10ஆவது முறையாக முதல மைச்சராக பதவியேற்றார். அவருடன் 26 பேர் அமைச்சர்களாகவும், பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகி யோர் மீண்டும் துணை முதலமைச்சர்களாகவும் பதவியேற்றனர். உள்துறையை பறித்துக்கொண்ட பாஜக மொத்தமாகக் கட்சி வாரியாக, பாஜகவில் 14 பேருக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி யில் 8 பேருக்கும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் 2 பேருக்கும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளில் தலா ஒருவருக்கும் அமைச் சர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று அமைச்சர்களின் இலாகா அறிவிப்பு வெளியானது. இந்த அறி விப்பில் 2005 முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை பாஜக வைச் சேர்ந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றுள்ளது. பொம்மை முதலமைச்சர் நிதிஷ் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம் தான் முக்கிய பிராந்தி யக் கட்சிகள் ஆகும். தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கூட்டணி மூலம் பீகாரில் தங்கள் இடத்தை காண்பித்துக் கொள்கின்றன. ஆனால் தற்போதைய புதிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட பாஜகவுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்தது தான். ஆனால் நிதிஷிடம் முதலமைச்சர் பதவியை மட்டும் கொடுத்து விட்டு, அவரிடம் அல்லது ஒரு முதலமைச்சரிடம் இருக்கக் கூடிய உள்துறையை பாஜக பறித் துள்ளது. இது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்புடன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
