வேர்களைத் தேடி பயணம்
17 Jan 2026, 2:42 pm
<p><strong>வேர்களைத் தேடி பயணம்</strong></p>
<p>மதுரை, ஜன.17- தமுஎகச காப்பீட்டு அரங்க கிளையின் சார்பில் காப்பீட்டு ஊழியர்களின் ‘வேர்களைத் தேடி’ பயணம் 12-வது ஆண்டாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் மறு நாளில் எல்ஐசி, ஜிஐசி காப்பீட்டு ஊழியர்கள் தங்க ளது குடும்பத்தினருடன் மதுரையை சுற்றியுள்ள சமணர் படுகைகள் உள்ளிட்ட பாரம்பரிய, வர லாற்றுச் சின்னங்களை பார்வையிடும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு திருவாதவூர் பகுதியில் உள்ள ஓவா மலை சமணர் படுகைக்கு பயணம் மேற்கொள் ளப்பட்டது. அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் வர லாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பா.ஆத்ம நாதன் உரையாற்றினார். நிகழ்வில் தமுஎகச மாவட்ட செயலாளர் பாண்டிய முத்துக்குமரன் , காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்ட இணைச் செயலாளர் எஸ்.முத்துகுமாரசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். </p>
