அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும்</strong></p>
<p>சேலம், மார்ச் 10- சுருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடத் தில் வீடு கட்டி கொடுக்க வேண்டி மனு அளித்தும் இதுவரை நடவ டிக்கை எடுக்காததை கண்டித்து கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு சுருட்டு தொழிலாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் உள்ள 150 க்கும் மேற் பட்ட சுருட்டு தொழிலாளர்களுக்கு செந்தாரப்பட்டி பகுதியில் உள்ள கன்று குட்டி கரடு அருகில் அரசு தரிசு புறம்போக்கு நிலத்தில் சுமார் ஐந்து ஏக்கர் இடத்தை வீடு கட்டிக் கொடுக்க அரசு சார்பில் இடம் வழங்கப்பட்டது. அதன் பிறகு தற் போது வரை வீடு கட்ட மனையாக பிரிக்காமல் எந்த நடவடிக்கையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கவில்லை. இதனை கண்டித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலு வலர் மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவு ஆகியோருக்கு மனு அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனையடுத்து தமிழ் நாடு சுருட்டு தொழிலாளர்கள் சங் கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செவ்வாயன்று கெங்க வல்லி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழி லாளர்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருக்க வீடு வழங்க வேண்டும். சுருட்டுத் தொழில் நலிவ டைந்துள்ளதால் கேரள அரசு பீடி சுருட்டு தொழிலாளர் குடும்பங்க ளுக்கு மாதம் ரூபாய் 3000 நிவார ணம் உதவி தொகை வழங்கி பாது காப்பது போல் தமிழக அரசும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். தொழிலாளர் பிள்ளைகள் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டது. ஒருங்கிணைப்புப் குழு கன்வீனர் எஸ்.சண்முகம் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், சிஐடியு சேலம் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ. முருகேசன், சிபிஎம் தாலுகாச் செய லாளர் தமிழ்மணி, என்.முருகேசன் ஏபிடி குழு உறுப்பினர் வி.சௌந்தர ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
