காப்பாளர் மற்றும் சமையலர் இன்றி செயல்படும் மாணவியர் விடுதி
4 Jan 2026, 5:55 pm
<p><strong>காப்பாளர் மற்றும் சமையலர் இன்றி செயல்படும் மாணவியர் விடுதி</strong></p>
<p>ஈரோடு, ஜன. 4- சத்தியமங்கலம் அரசு மாணவியர் விடுதியில், போதிய பணியாளர்கள் இன்றி அவதிப்பட்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத் தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவியர் விடுதி, போதிய பராமரிப்பு மற்றும் பணியா ளர்கள் இன்றி இக்கட்டான நிலையில் உள்ளது. சுமார் 55 ஆண்டுகளை கடந்த இந்த விடுதி, தற்போது ‘சமூக நீதி விடுதி’யாகச் செயல்பட்டு வருகிறது. இங்குப் பட்டியலின மாணவிகள் மட்டுமின்றி, பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர். சத்தியமங்கலத்தில் உள்ள பிற் படுத்தப்பட்டோர் நல விடுதி முழு கொள்ளளவை எட்டி விட்டதால், அங்கு இடம் கிடைக்காத அரசு மற்றும் தனி யார் கல்லூரி மாணவிகளும் இந்த விடுதியிலேயே தங்கியுள்ளனர். விடுதியின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டிய நிலையில், நிர்வாக ரீதியாக பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, விடுதி காப் பாளர் பணியிடம் காலியாக உள்ளதால், நம்பியூர் விடுதி காப்பாளர் கூடுதல் பொறுப்பாக இதனைக் கவ னித்து வருகிறார். அனுமதிக்கப்பட்ட ஒரு அலுவல கப் பணியாளர் இடமும் காலியாக உள்ளது. இரண்டு சமையலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இதனால் சமையலரும், தூய்மைப் பணியாளரும் ஒருவருக்கொருவர் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள் ளப்பட்டுள்ளனர். மேலும், அரை நூற்றாண்டை கடந்த விடுதி கட்ட டம் பல இடங்களில் பழுதாகி, மாணவிகள் தங்குவ தற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் கட்டடத்தின் நிலை மேலும் மோசமடை வதாக மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் செயல் பட்டு வந்த மாணவர் விடுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் புதிய விடுதி கட்டடம் கட்டப்படா மல் இருப்பது அப்பகுதி மாணவர்களிடையே ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வியிலும் பாதுகாப்பி லும் அதிக அக்கறை காட்டும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, காலிப் பணி யிடங்களை நிரப்பவும், சிதிலமடைந்த கட்டடத்தை புதுப்பிக்கவும் வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p> </p>
