தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்!

3 Jan 2026, 2:20 pm
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்!
<p><strong>அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு&nbsp;&nbsp;உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்!</strong></p> <p>முதல்வர் அறிவிப்பு சென்னை, ஜன.3- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு &ldquo;தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ தியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme &ndash; TAPS)&rdquo; எனும் ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் &nbsp;மு.க. ஸ்டாலின் அறி வித்துள்ளார். அரசு ஊழியர்கள் - ஆசிரியர் &nbsp;களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை யினை நிறைவேற்றுவதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய வகை யிலும் தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம் அறி விக்கப்பட்டு உள்ளதாக முதலமைச் சர் தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் முதல்வர் வெளியிட்ட அறிவிப் பின்படி, இந்தப் புதிய &ldquo;தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட&rdquo;த்தின் கீழ், அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ் &nbsp;வாறு 50 சதவிகிதத்திற்கு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கு வதற்கு, ஊழியர்களின் 10 சதவிகித பங்களிப்போடு, ஓய்வூதிய நிதி யத்திற்குத் தேவைப்படும் கூடுதல் &nbsp;நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே &nbsp;ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. &ldquo;50 சதவிகிதம் உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதி யதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு &nbsp;அலுவலர்களுக்கு வழங்கப்படு வதற்கு இணையான அக விலைப்படி (Dearness Allowance) உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதிய தாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெ னவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பி னர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூ தியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக (Family pension) வழங்கப்படும். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் &nbsp;காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு &nbsp;மிகாமல் பணிக்கொடை (Gratuity) &nbsp;வழங்கப்படும். புதிய உறுதியளிக் கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல் &nbsp;படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமலேயே பணிஓய்வு பெறும் அனைத்து ஊழி யர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதி யம் வழங்கப்படும். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, &nbsp;புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட &nbsp;ஓய்வூதியம் செயல்படுத்தப்படு வதற்கு முன்னர் இடைப்பட்ட காலத் &nbsp;தில், ஓய்வூதியம் இன்றி பணிஓய்வு &nbsp;பெற்றவர்களுக்கு சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்&rdquo; என்று முதல்வர் அறிவித்துள்ளார். நிதிச் செலவு- அரசின் உறுதி &ldquo;மேற்கூறிய தமிழ்நாடு உறுதிய ளிக்கப்பட்ட ஓய்வூதியத் (TAPS) திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி &nbsp;ரூபாய் அளிக்க வேண்டும்; இது &nbsp;மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு &nbsp;ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் &nbsp;கோடி ரூபாயை அரசின் பங்களிப் பாக வழங்க வேண்டும்; இந்தப் பங்க ளிப்புத் தொகையும் ஊழியர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது &nbsp;தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடு மையான நிதிச்சூழலிலும், அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் &nbsp;களைக் காத்திடும் பொருட்டும், மேற்கூறிய செலவினங்களை தமிழ் &nbsp;நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்&rdquo; &nbsp;என்று முதல்வர் கூறியுள்ளார். முதல்வரின் வேண்டுகோள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரி யர்களின் நலனையும் அவர்களது குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதிற்கொண்டு, தொலைநோக்குப் &nbsp;பார்வையுடனும் நடைமுறைச் சாத்தி யங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரி யர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக் &nbsp;கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூ தியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன் களையும் பெற வழிவகுக்கும் வகை யில் செயல்படுத்தப்பட உள்ள இந்த &nbsp;உறுதியளிப்பு ஓய்வூதியத் (TAPS) &nbsp;திட்டத்தினை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வர வேற்று, அதனைச் செயல்படுத்து வதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண் டுள்ளார்.<br /> &nbsp;&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.