தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

25 Mar 2026, 4:19 pm
விளையாட்டு

34 வருடங்களுக்குப் பிறகு ‘பார்முலா ஒன்’ பிரிவில் கால்பதிக்க தயாராகும் சிறுமி

மோட்டார் ஸ்போர்ட்ஸில் வரலாறு படைக்கப்போகும் இந்தியா

பெண்கள் அனைத்து விளையாட்டுகளிலும் ஜொலிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் கார் பந்தய பிரிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அள விலேயே வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதனால் ‘பார்முலா ஒன்’ என அழைக்கப்படும் மோட்டார்  ஸ்போர்ட்ஸ் பிரிவில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே உள்ளது. இந்நிலையில், இந்திய சிறுமி ஒருவர் ‘பார்முலா ஒன்’ பிரிவில் கால் பதிக்கும் முனைப்பில் கார்டிங் ஆடவர் களோடு மிரட்டி வருகிறார். கார்டிங் ஜூனியர் பிரிவில் (12-14 வயது) முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும்  ஆதிகா (11 வயது) என்ற இந்திய சிறுமி, 40 கார்கள் வரை  பங்கேற்கும் நெருக்கடியான கார்டிங் பந்தயங்களில் பெரும்பாலான ஆண் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி உலக அரங்கில் சிறப்பாகச் செயல்படும் ‘கார்டிங் வீராங்கனை’ என்ற சிறப்பு பெயரை ஒரே ஆண்டில் பெற்றுள்ளார். ‘பார்முலா ஒன்’ ஆதிகா கார்டிங் உலகில் பல சாதனைகளைப் படைத்து வரும் வேளையில், அவரது இறுதி இலக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸின் உச்சமான ‘பார்முலா ஒன்’ பந்தயத்தில் காலடி வைப்பதே ஆகும். 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு பெண் வீராங்கனையும் ‘பார்முலா ஒன்’ பந்தயத்தில் பங்கேற்கவில்லை என்பது தான் சோகமான விஷயம் ஆகும். இந்த சோகத்தை தகர்க்கும் முனைப்பில், ஆதிகா இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டபிள்யு.எஸ்.கே சூப்பர்  மார்ஸ்டர்ஸ் (WSK Super Masters) தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் வாலன்சியாவில் (ஸ்பெயின்) நடந்த ‘சாம்பியன்ஸ் ஆப் தி பியூச்சர்’ தொடரின் ஐரோப்பிய சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து மேடை ஏறினார் (இது மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவில் உயரிய கவுரவம் ஆகும்). 4 வருடத்தில்... தற்போது இத்தாலியில் பந்தயங்களில் பங்கேற்று வரும் ஆதிகா கூறுகையில்,”மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது இரு பாலினத்தவரும் பங்கேற்கும் விளையாட்டு என்றாலும், இதில் ஆண்கள் ஆதிக்கம் அதிகம். அதனால்தான் பல பெண்கள் பார்முலா ஒன்-க்கு வருவதில்லை. போட்டியின் போது சில நேரங்களில் வீரர்கள் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். அவர்கள் திடீரென பிரேக் போடுவார்கள்; கார்டிங் பந்தயத்தில் அதற்குத் தண்டனை கிடையாது என்பதால், இது சாதாரணமானது தான். சில நேரங்களில் என் மீது மோதவும் செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னை மிரட்டினால், நானும் பதிலுக்கு மிரட்டுவேன். நான் என் தந்தையாலோ அல்லது பார்முலா ஒன்-இல் சேர வேண்டும் என்ற கனவோடோ இதைத் தொடங்கவில்லை. 2021 வரை எனக்கு ‘பார்முலா ஒன்’ பற்றி எதுவும் தெரியாது. நான் டிவியில் பார்த்த முதல் பந்தயம் 2021 அபுதாபி கிராண்ட் பிரீ தான். வெர்ஸ்டாப்பன் முந்திச் சென்ற அந்தத் தருணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதுதான் எனக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

கார்டிங் என்றால் என்ன?

கார்டிங் (Karting) என்பது ‘பார்முலா 1 (Formula 1)’ போன்ற பெரிய பந்தயங்களுக்குச் செல்வதற்கான முதல் படியாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு சிறிய, திறந்தவெளி நான்கு சக்கர வாகனப் பந்தயம் ஆகும். கார்டிங் பிரிவில் பங்கேற்கும் கார் மிகச் சிறியவை. இதில் கூரை,  கதவுகள் அல்லது விண்ட்ஷீல்ட் இருக்காது. தரைக்கு மிக நெருக்கமாக அமர்ந்து ஓட்டும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டிருக்கும். சிறியதாக இருந்தாலும், பந்தயக் களத்தில் மணிக்கு 100 கி.மீ முதல் 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியவை ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.