கீழ்தொம்பை கிராமத்திற்கு மயானப் பாதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து கூட்டம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>கீழ்தொம்பை கிராமத்திற்கு மயானப் பாதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து கூட்டம்</strong></p>
<p>சேலம், ஜன.7- சேலம் மாவட்டம் ஆத் தூர் வட்டம், கீரிப்பட்டி பேரூ ராட்சிக்குட்பட்ட கீழ் தொம்பை கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான மயானப் பாதை வசதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் விளைவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்க ளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரி விக்கும் கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. கீழ்தொம்பை கிராமத்தில் மயானப் பாதை இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து கடந்த 26.08.2025 முதல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வருவாய் துறையின ருக்குப் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட் டன. தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று கோட் டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும், டிசம்பர் 23 அன்று கீழ்தொம்பை பகுதி யில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி காத் திருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டன. மக்க ளின் தீவிரப் போராட்டத்தை அடுத்து, வரு வாய் துறையினர் டிசம்பர் 24 அன்று மயா னப் பாதையை அளவீடு செய்தனர். பின்னர் டிசம்பர் 29 அன்று முறைப்படி மயானப் பாதை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் பட்டது. நன்றி அறிவிப்பு கூட்டம் வெற்றிகரமாகப் பாதை அமைக்கப்பட் டதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் நின்ற பொதுமக்களுக்கும், விரைந்து நட வடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கீழ்தொம்பை பகுதியில் கிளைச் செயலாளர் ஏ. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன், மாநில குழு உறுப் பினர் ஏ. குமார், ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ. முருகேசன் மற்றும் தாலுகா குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்ட கீழ்தொம்பை பகுதியைச் சேர்ந்த பி. செந்தில் முருகன், ஏ. ராமகோவிந்தன், சி. சிவா, ஏ. கலியபெரு மாள், கே. திருப்பதி, பி. முருகேசன், எஸ். காளியம்மாள், கொடியரசு ஆகிய 8 பேர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கெங்கவல்லி தாலுகா செய லாளர் தமிழ் மணி, அமைப்புக்குழு உறுப்பி னர்கள் எஸ். பவித்ரன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கோரிக்கை நிறை வேறியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
