கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அம்மோனியா வாயு கசிவு புதிதல்ல!
24 Jun 2026, 1:19 am

கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அம்மோனியா வாயு கசிவு புதிதல்ல!

திருவள்ளூர், ஜூன் 23-திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கண்ணிகை பேர் கிரா மத்தில் செயல்பட்டு வரும் புனித பீட்டர் பால் இறால் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதும், அம்மோனியா வாயு கசிவால் 9 பேர் உயிரிழந்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் நேபாளம், அசாம், பீகார், ஒரிசா மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி கூண்டுகள் போன்ற அமைப்புகளில் அடைத்து வைக்கப்பட்டு, மூன்று ஷிப்ட் முறையில் கடும் வேலைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு முறை யான உணவு, தங்குமிடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி

கள் கூட வழங்கப்படவில்லை. மேலும், பெண் தொழிலாளர்கள் நேரக்

கணக்கின்றி கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. உள்ளூர் தொழிலாளர்கள் 800 பேரில் 20க்கும் குறைவானவர்களே பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் வாயு கசிவு

10 ஆண்டுகாலப் போராட்டம்

இந்நிறுவனம் விடியற்காலை 2 மணி முதல் 4 மணி வரை அம்மோனியா வாயுவை வெளியேற்றுவதை வழக்க மாகக் கொண்டுள்ளதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டும், சமீபத்திய ஜமாபந்தி கூட்டத்தில் திருவள்ளூர் ஆர்டிஓ-விடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நள்ளிரவில் நிகழ்ந்த துயரம்

இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த 70 க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் திடீரெனக் கூச்சலிட்டனர். இதைக் கேட்டு காப்பாற்றச் சென்ற தொழிலாளர்கள் பலர் மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் வாய் மற்றும் மூக்கிலிருந்து நுரை மற்றும் ரத்தம் வெளியேறியது.

அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள்

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வேல்ஸ் மருத்துவமனை மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இடவசதி இல்லாத காரணத்தினால், மற்றவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள தாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிறுவனத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், அம்மோனியா வாயு கசிவை அகற்றும் பணியில் தீயைணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற ஆலை களை தொழிலாளர் நலத்துறை மற்றும்

சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தி

ருந்ததால் அசாம்பாவித சம்பவங்களை தடுத்திருக்கலாம். உயிரிழப்புகளையும் தடுத்திருக்கமுடியும். மேலும் கவனக்குறைவாக செயல்பட்டு வந்த நிறுவனத்தை எச்சரித்து குளறுபடிகளை சரி செய்திருக்க முடியும்.