திருச்சி விரைவு செய்திகள்
18 Feb 2026, 3:04 pm

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்

மாயம் நாகர்கோவில். பிப் .18 தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெர்பின் (31,) ஆண்டனி ராஜ் என்பவரின் விசைப் படகில் பிப்.13ம் தேதி தேங்காப் பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். 116 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டி ருந்த போது ஜெர்பினை திடீரென்று காணவில்லை. கடலில் விழுந்திருக்கலாம் என சக மீன்வர்கள் அவரை தேடினர். 3 நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி பைக் சுற்றுப் பயணம்: மார்த்தாண்டத்தில் வரவேற்பு

குழித்துறை, பிப். 19- பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர் பைக்கில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாட்டுடைமையான வங்கிக ளை மத்திய அரசு தனியார் மய மாக்க திட்டமிட்டுள்ளது. பொ துத்துறை வங்கிகளை பாதுகாப் போம் என்பதை வலியுறுத்தி “வங்கி நாட்டுடைமையானது, வங்கி மக்களுக்கானது” என்ற முழக்கத்தோடு சேலத்தைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் ஷாதத் நாடு முழுவதும் பைக்கில் சுற்று பயணம் மேற்கொண்டுள் ளார். 8000 கிலோ மீட்டர் பயணத்தை கடந்த மாதம் 30 ம் தேதி சேலத்தில் துவக்கினார். சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கிழக்கு மகா ராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்திராகாண்டு, டில்லி, மும்பாய், கர்நாடகா, கேர ளம் வழியாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22 ம் தேதி கரூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். பைக் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஷாதத் மார்த்தாண் டம் வருகை தந்தார். இவருக்கு மார்த்தாண்டம் பகுதி வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வரவேற்பளிக் கப்பட்டது. மாவட்ட ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் சுரேஷ் மேசியா தாஸ், ஏ ஐ பி இ ஏ நிர்வாகிகள் லிஸ்பின் போஸ், அருள் பிரதீப், ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்

விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

நாகர்கோவில்,பிப். 18 நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த திங்கட்கிழமை மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவ ருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதைய டுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குணமடையா ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேஷின் கிட்னி, கண், கல்லீரலை தானம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். செவ்வாயன்று காலையில் மகேசின் உடலில் இருந்து இரண்டு கிட்னி, கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு கிட்னியை திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னியை காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இதே போல கல்லீரலும் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் ஆசாரிப் பள்ளம் மருத்துவமனை யிலிருந்து புறப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். . கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகேஷின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். அவர்கள் கூறுகையில், “மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

நாகர்கோவில் பிப்.18 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு குழு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்கள் மற்றும் குழு உறுப்பினர்க ளிடையே தெரிவிக்கையில்,- கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பி னர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் விவாதிக் கப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பதில் அளிக்கப்பட்டது. மனிதக்கழிவுகளை மனி தர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்பு குழு உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட கோரிக்கையின் மீது சம்மந்தப்பட்ட அலு வலர்கள் பதில் அளித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படு கின்ற அரசு நலத் திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமெனவும், தாட்கோ துறையின் சார்பில் வழங்கப்படுகின்ற கடனு தவிகள் மற்றும் தூய்மை பணியளார்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ் வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோக னா, காவல்துறையினர்கள், ஆணைய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை அரசு சட்டக் கல்லூரிக்கு மாணவர் விடுதி அமைத்திட எஸ்எப்ஐ வலியுறுத்தல்

திருநெல்வேலி, பிப்.18- இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், நெல்லை மாவட்ட செயலா ளர் சைலஸ் அருள்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருநெல் வேலி அரசு சட்டக் கல்லூ ரியில் இட ஒதுக்கீட்டின் கீழ் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவர்கள் தங்குவதற்கு என கல்லூரி வளாகத்தின் உள்ளேயே மாணவர் விடுதி வசதி இல்லை. கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அரசு சட்டக் கல்லூரிக்கு என மாணவர் விடுதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போ ராட்டத்தின் விளைவாக அர சாங்கம் ரெட்டியார்பட்டி அருகே மாணவர் விடுதி யினை அமைத்தது. ஆனால், கல்லூரிக்கும் விடு திக்கும் வெகுதூரம் இருப்ப தால் மாணவர்கள் யாரும் அந்த விடுதியினை இது வரை பயன்படுத்தவில்லை. அரசும் அந்த விடுதியினை கேட்பாரின்றி அப்படியே பயன்படுத்தாமல் கை விட்டுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியினை வளாகத்திற்கு அருகாமை யில் வேறு இடத்தில் அமைக்க முயற்சிக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. தற்போது மாணவர்கள் விடுதி இல்லாத சூழலால் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழித்து தங்குமிடம் ,உணவு என சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இத னால் ஏழை எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து சட்டக் கல்வி பயில வரும் மாணவர்கள் பெரும் இடர்பாட்டினை சந்தித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டக் கல்லூரிக்கு உள்ளே யே அல்லது அருகாமை யிலேயே மாணவர் விடு தியினை அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கான அறி விப்பினையும் நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவித்திட இந்திய மாண வர் சங்கம் திருநெல்வேலி மாவட்ட குழு வலியுறுத்தி உள்ளது.

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு

தூத்துக்குடி, பிப்.18- இந்தியத் துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ‘இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026’-இல் ‘AI-Powered Ports’ என்ற சிறப்பு அமர்வை நடத்தியது. பிப்ரவரி 17 அன்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய கடல்சார் கட்டமைப்பை AI தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முக்கிய மைல்கல்லாகும். துறைமுகங்கள் வெறும் தானியக்க முறையில் இயங்குவதற்குப் பதிலாக, நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் “Thinking Ports”-ஆக மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்க, துறைமுகச் செயல்பாடுகளில் AI-ஐ ஒருங்கிணைப்பது இனி விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவையாகும். செயல்திறனை மேம்படுத்துதல், முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சரக்கு இயக்கத்தை வேகப்படுத்துதல் போன்றவற்றில் AI முக்கியப் பங்காற்றும். பிரதமர் அலுவலக பொருளாதார ஆலோ சனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் கௌரவ் வல்லப், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் உள்ளிட்ட பல முக்கிய நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த முயற்சியின் மூலம், இந்தியத் துறைமுகங்களை வெறும் வர்த்தக நுழை வாயில்களாக மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியின் புத்திசாலித்தனமான தூண்களாக மாற்றும் தேசிய அளவிலான உரையாடலை வ.உ.சி. துறைமுகம் தொடங்கியுள்ளது. இத்தகவலை வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பிப்.20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, பிப்.18- நெல்லையில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- திருநெல்வேலி மாவட் டத்தில் 2026 பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026 அன்று 3ஆவது வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனை த்துத் துறை அலுவலர்க ளும் கலந்து கொண்டு விவ சாயிகளின் கோரிக்கை களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடை பெறும் இக்கூட்டத்தில் திரு நெல்வேலி மாவட்ட விவசா யிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விஏஓவின் வீட்டுக் கதவை உடைத்து நகைக்கொள்ளை

தூத்துக்குடி,பிப்.18- தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). இவர் தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். நேற்று அவர்கள் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைக ளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் ஆகும். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி பகுதியில் சூரிய மின்விளக்கு பொறி வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு

தென்காசி,பிப். 18- தென்காசி வட்டாரத்தில் தேர்வான நெல் விதைப் பண்ணை திடல்களில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய மின்விளக்கு பொறி செயல்பாடுகளை ஆய்வு செய்தார் கள். இரசாயனம் இல்லாமலும் செலவு இல்லாமலும் தீமை செய்யும் பூச்சிகளை மிகவும் எளிதாக கவர்ந்து அழிக்கக் கூடியது. நெற்பயிரின் நடுப்பகுதியில் சூரிய மின்விளக்கு பொறியை வைக்க வேண்டும். ஏனென்றால் நடுப்பகுதியில் வைப்பதினால் நான்கு திசைகளிலிருந்து அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் மிகவும் எளிதாக கவர்ந்து அழிக்கப்படுகிறது என்ற தகவல்களை தெரிவித்தார். மேலும், சூரிய மின்விளக்கு பொறி செயல்படும் நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 .வரை தான் இதனை பயன் படுத்த வேண்டும். ஏனென்றால் இரவு 9 மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். எனவே சூரிய மின்விளக்கு பொறியை இரவு 9 மணிக்கு மேல் அணைத்து விட வேண்டும். இந்த சூரிய மின்விளக்கு பொறியைய் பயன்படுத்துவதால் நெல் பயிர்களில் 35 சதவிகிதம் பூச்சி தாக்குதல் குறைந்து கூடுதலாக 50 சதவிகிதம் மகசூல் அதிகரிக்கும் என்ற தகவல்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்தார்.

எட்டயபுரம் அருகே விபத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் பலி

தூத்துக்குடி,பிப்.18- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் மகன் பிரதீப் குமார் (32). இவர் அரசு போக்கு வரத்துக்கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் ஒருவர் சமீபத்தில் காலமானார். துக்கம் விசாரிப்பதற்காக சென்னையில் இருந்து எட்டயபுரத்திற்கு வந்திருந்த உறவினர்களை அழைத்து வருவதற்காக, பிரதீப் குமார் தனது காரில் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் காரும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் இரண்டு முறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிரதீப் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு

தூத்துக்குடி, பிப்.18- இந்தியத் துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ‘இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026’-இல் ‘AI-Powered Ports’ என்ற சிறப்பு அமர்வை நடத்தியது. பிப்ரவரி 17 அன்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய கடல்சார் கட்டமைப்பை AI தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முக்கிய மைல்கல்லாகும். துறைமுகங்கள் வெறும் தானியக்க முறையில் இயங்குவதற்குப் பதிலாக, நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் “Thinking Ports”-ஆக மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்க, துறைமுகச் செயல்பாடுகளில் AI-ஐ ஒருங்கிணைப்பது இனி விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவையாகும். செயல்திறனை மேம்படுத்துதல், முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சரக்கு இயக்கத்தை வேகப்படுத்துதல் போன்றவற்றில் AI முக்கியப் பங்காற்றும். பிரதமர் அலுவலக பொருளாதார ஆலோ சனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் கௌரவ் வல்லப், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் உள்ளிட்ட பல முக்கிய நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த முயற்சியின் மூலம், இந்தியத் துறைமுகங்களை வெறும் வர்த்தக நுழை வாயில்களாக மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியின் புத்திசாலித்தனமான தூண்களாக மாற்றும் தேசிய அளவிலான உரையாடலை வ.உ.சி. துறைமுகம் தொடங்கியுள்ளது. இத்தகவலை வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.