தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறையே சரியானது!

11 Jan 2026, 2:59 pm
இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி  உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறையே சரியானது!
<p><strong>இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி &nbsp;உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறையே சரியானது!</strong></p> <p>சென்னை, ஜன. 11- &ldquo;இலங்கையில் தமிழர்களின் வரலாற்றுப்பூர்வ மான உரிமைகளையும், தன்னாட்சி எண்ணங்க ளையும் நிலைநிறுத்தும் வகையில், ஒரு கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்திய அரசு இலங்கை &nbsp;அதிகாரிகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்&rdquo; &nbsp;என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு &nbsp;முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 77 ஆண்டுகால ஒடுக்குமுறை இலங்கைத் தமிழர்கள் கடந்த 77 ஆண்டுகளுக்கும் &nbsp;மேலாகத் திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வன்முறையைச் சகித்து வருகின்றனர். இது ஒரு சமூகத்திற்கு எதிரான &nbsp;இனப்படுகொலை போன்ற நிலைக்கு இட்டுச் சென்று உள்ளது. 1947 முதல் 1978 வரை உருவாக்கப்பட்ட இலங்கையின் அனைத்து அரசியலமைப்புகளும் ஒற்றையாட்சி (Unitary State) முறையிலேயே அமைந் திருந்தன. இது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை களை மறுக்கவும், இன வன்முறைக்கும் காரணமாக அமைந்தது. உள்நாட்டுப் போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும், தமிழர்களின் பாரம்பரியப் பகுதிகளில் நில அபகரிப்புகளும், மக்கள் தொகை மாற்றங்களும் தொடர்ந்து வருவது வேதனையளிக்கிறது. புதிய அரசியலமைப்பு குறித்த கவலைகள் தற்போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் முயற்சிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒற்றையாட்சி மாதிரியையே வலுப்படுத்துவதாக &nbsp;உள்ளது. இது தமிழர்களின் சுயாட்சி எண்ணங்களைப் புறக்கணித்து, அவர்களை மேலும் அச்சுறுத்தும் வகை யில் அமைந்துள்ளதாகத் தமிழ்த் தலைவர்கள் கவலை &nbsp;தெரிவிக்கின்றனர். &lsquo;திம்பு கோட்பாடுகள்&rsquo; மற்றும் கூட்டாட்சி முறை இச்சூழலில், 1985-இல் பூடானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட &nbsp;&lsquo;திம்பு கோட்பாடுகளை&rsquo; (Thimpu Principles) முதல மைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி: &nbsp;* இலங்கைத் தமிழர்களுக்கான தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்). *வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழர் களின் பாரம்பரிய தாயகமாக ஏற்பது (தமிழர் தாயகம்). * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதி &nbsp;செய்தல் (தமிழர் தன்னாட்சி). * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி &nbsp;செய்யும் கூட்டாட்சி (Federal) முறையை நிறுவுதல். இந்தக் கூறுகளை உள்ளடக்காத எந்தவொரு அரசி யலமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற தன்மைக்கே வழிவகுக்கும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார். உயர்மட்டத் தூதரக நடவடிக்கை தேவை இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தமிழ்நாட் டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்கு ஏற்படும் பாதிப்புகள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மாகா ணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும், சிறுபான் மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி முறையை உருவாக்க இந்திய அரசு உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.