தவெகவின் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவர் ரகலை
13 Mar 2026, 4:52 pm
<p><strong>தவெகவின் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவர் ரகலை</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 13- மது ஒழிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வியா ழனன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது மது போதையில் இருந்த ஒருவர் அமளியில் ஈடுபட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் குமரன் நினைவகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சித் தொண்டர்கள் போதை ஒழிப்பு கோரிக் கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப் பாட்டத்தின் போது அங்கு குவிந்திருந்த தவெக தொண்டர்கள் சிலர் தலைமைக்கு கட் டுப்படாமல் விசில் அடித்து சத்தம் போட்ட னர். மேலும் மது போதையில் இருந்த நபர் ஒரு வர் திடீரென சாலையில் ஓடி வந்து, போலீ சாரைப் பார்த்து, விஜய் வருவாரு, சமூகத் தையே மாற்றுவாரு, விஜய் தான் அடுத்த முத லமைச்சர் என கூச்சலிட்டு அமளியில் ஈடு பட்டார். இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசா ரணையில், அவர் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் என்பதும், அவர் பெயர் ராகுல் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் மீது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்ப தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. கட்சியின் ஆதரவாளர் என்ற பெயரில் மது போதையில் வந்த நபர் ஒருவர் இவ்வாறு பேசிய சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாகி உள்ளது.</p>
