விபத்தில் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் மரணத்திலும் வாழ்வளித்த மாற்றுத்திறனாளிப் பெண்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>விபத்தில் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் மரணத்திலும் வாழ்வளித்த மாற்றுத்திறனாளிப் பெண்</strong></p>
<p>கோவை, ஜன.21– விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடந்துள்ளது. தங்களின் துயரத்திலும் மற்றவர்களுக்கு வாழ்வளிக்க முன் வந்த அந்த ஏழை உழைப்பாளிகளின் குடும்பத்தின் செயலை பல்வேறு தரப் பினரும் வெகுவாக பாராட்டி வருகின்ற னர். கோவை மதுக்கரை ஒன்றியம், மலு மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி கிருஷ்ண வேணி. இத்தம்பதியினருக்குச் சௌ பரணிகா ஸ்ரீ மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ள னர். ரங்கசாமி மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கள் ஆவர். கடந்த ஞாயிறன்று (ஜன.19) இரவு 8 மணியளவில், கிருஷ்ணவேணி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர் பாராத விதமாக அவர்கள் மீது மோதி யது. இந்த விபத்தில் கிருஷ்ண வேணிக்கு தலையில் பலத்த காய மும், மகள் சௌபரணிகா ஸ்ரீக்கு முகத் தில் காயமும் ஏற்பட்டது. விபத்தை கண்டு அதிர்ச்சிய டைந்த ஊர் பொதுமக்கள், காயமடைந் தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள எப்.ஐ.எம்.எஸ் (FIMS) மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு கிருஷ்ண வேணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும், 24 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று அவர் மூளைச் சாவடைந்ததாக மருத்துவர்கள் அறி வித்தனர். மனைவியின் இழப்பால் வாடிய ரங்கசாமி மற்றும் கிருஷ்ணவேணியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள், பெரும் துயரத்திலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். கிருஷ்ணவேணி யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதனன்று அவ ரது கல்லீரல், நுரையீரல், கண்கள் மற் றும் இதர உறுப்புகள் தானமாகப் பெறப் பட்டன. முன்னதாக அவரது உடல் உறுப்புகள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. அனைத்து உறுப்பு களும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப் பட்ட பிறகு, அவரது உடல் அரசு மரி யாதையுடன் இறுதிச் சடங்கிற்காக உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாய்பேச முடியாத நிலையிலும், மரணத்திற்குப் பிறகு மற்றவர் வாழ்வ தற்குத் தன் உடலையே கொடையாகத் தந்த கிருஷ்ணவேணியின் குடும்பத் தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.</p>
