தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மனிதாபிமானம் மறந்த அதிகாரிகளால் படிகளில் ஊர்ந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி!

4 Apr 2026, 4:02 pm
மனிதாபிமானம் மறந்த அதிகாரிகளால் படிகளில் ஊர்ந்து  சென்று வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி!
<p><strong>மனிதாபிமானம் மறந்த அதிகாரிகளால் படிகளில் ஊர்ந்து &nbsp;சென்று வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி!</strong></p> <p>கோவை, ஏப். 4- தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலு கைகளை அறிவித்து வரும் நிலை யில், கோவையில் மாற்றுத்திற னாளி வேட்பாளர் ஒருவர் அதிகாரி களின் கறார் போக்கினால் படிக் கட்டுகளில் ஊர்ந்து சென்று மனு தாக்கல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் செல்வ புரம் பகுதியைச் சேர்ந்த சங்கரராஜ் &nbsp;(44) என்பவர் சுயேச்சை வேட்பாள ராகப் போட்டியிட முடிவு செய்தார். &nbsp;இதற்காக சனியன்று, தனது ஆதர வாளர்களுடன் பேரூர் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வந்தார். தேர் தல் அலுவலகம் பழைய கட்டிடத் தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இரு கால்களும் &nbsp;பாதிக்கப்பட்ட சங்கரராஜால் படி களில் ஏறுவது இயலாத காரியம். இதனால், தேர்தல் நடத்தும் அலுவ லர் மாருதிப்பிரியாவிடம், &ldquo;என் னால் மேலே வர முடியாது, தயவு செய்து கீழே வந்து மனுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்&rdquo; என உருக்கமாகக் கோரிக்கை வைத் தார். ஆனால், அதிகாரியோ &ldquo;விதிமுறைப்படி வேட்பாளர் அறைக்குள் வந்துதான் மனு அளிக்க வேண்டும்&rdquo; என மனிதாபி மானமின்றி கறாராகக் கூறிவிட் டார். படிக்கட்டுகளில் ஊர்ந்த வேட்பாளர் அதிகாரியின் பதிலால் அதிர்ச்சி யடைந்த சங்கரராஜ், வேறு வழி யின்றி தனது கைகளையே கால் களாக்கி, 40-க்கும் மேற்பட்ட படிக் கட்டுகளில் ஒவ்வொரு படியாக ஊர்ந்து மிகுந்த உடல் உபாதைக ளுக்கிடையே முதல் மாடிக்குச் &nbsp;சென்றார். அவர் மூச்சிரைக்க ஊர்ந்து சென்ற காட்சி அங்கிருந்த வர்களை கண்கலங்கச் செய்தது. &nbsp;ஒருவழியாக முதல் மாடியை அடைந்த அவர், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்த பின் செய்தி யாளர்களிடம் சங்கரராஜ் கூறியதா வது: &rdquo;மாற்றுத்திறனாளிகள் மக்கள் &nbsp;முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் &nbsp;தலைவரான நான், எங்கள் சமூகத் தின் அரசியல் அங்கீகாரத்திற்காக தொண்டாமுத்தூர் மற்றும் கோவை &nbsp;தெற்கு தொகுதிகளில் போட்டியிடு கிறேன். இந்தத் தொகுதியில் 25 &nbsp;ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ள னர். தேர்தல் நாளன்று மட்டும் சாய்வுதளம், வீல்சேர் என வசதி களைச் செய்து தரும் அரசு, வேட்பு மனு தாக்கலின் போது மட்டும் &nbsp;எங்களை ஏன் கண்டுகொள்வ தில்லை? எங்களைப் போன்றவர் கள் வரும்போது அதிகாரிகள் கீழே &nbsp;வந்து மனுவைப் பெற சட்டத்தில் இடமில்லையா? அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதி யாக அலுவலகங்களை அமைக்கக் கூடாதா?&rdquo; என கேள்வி எழுப்பி னார். அனைத்துத் தரப்பு மக்களும் &nbsp;சமம் என முழங்கும் தேர்தல் &nbsp;களம், ஒரு மாற்றுத்திறனாளியை இப்படிப் படிக்கட்டுகளில் ஊர்ந்து சென்றது சமூக ஆர்வலர்க ளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறை களைத் தாண்டி மனிதாபிமானத் துடன் அதிகாரிகள் செயல் பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.