முந்தய பக்கம்

முத்துசெட்டிபாளையத்தில் பாழடைந்து காணப்படும் பொதுக்கழிப்பிடம்

9 Dec 2025, 4:25 pm
முத்துசெட்டிபாளையத்தில் பாழடைந்து காணப்படும் பொதுக்கழிப்பிடம்
<p><strong>முத்துசெட்டிபாளையத்தில் பாழடைந்து காணப்படும் பொதுக்கழிப்பிடம்</strong></p> <p>அவிநாசி, டிச.9- அவிநாசி அருகே முத்துசெட்டிபாளை யத்தில் பாழடைந்து காணப்படும் பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்காவிட்டால் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் என &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்காடு &nbsp;கிளை தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரி விக்கையில், அவிநாசி நகராட்சிக்குட்பட்ட &nbsp;முத்துசெட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இங்குள்ள பொதுக் கழிப்பிடத்தில் பத்து &nbsp;கழிப்பறைகள் மற்றும் இரண்டு குளியல் &nbsp;அறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகள் மிக வும் பழுதடைந்துள்ளன. இதை உடனடியா சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர், &nbsp;நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோரிடம் மனு &nbsp;அளிக்கப்பட்டுள்ளது. இது உட்பட பல்வேறு &nbsp;கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தியுள்ளோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக் கப்பட்டவில்லை. இந்நிலையில் செவ்வா யன்று பெண்கள் இந்த கழிப்பறைக்கு சென் றுள்ளனர். அப்போது கழிப்பறையின் மேற் கூரை இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக &nbsp;யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏதேனும் &nbsp;அசம்பாவிதம் நிகழும் முன்பு உடனடியாக கழிபறைகளை சீரமைத்துக் தர வேண்டும். &nbsp;இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி போராட் டம் நடத்துவோம் என கிளைச் செயலாளர் பன் னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram