ரூ.6 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் தொண்டு நிறுவனம் வழங்கியது
21 Feb 2026, 3:26 pm
<p><strong>ரூ.6 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் தொண்டு நிறுவனம் வழங்கியது</strong></p>
<p>விருதுநகர், பிப்.21- மாவட்டத்தின் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களின் பயன்பாட் டிற்காக ரூ.6 லட்சம் மதிப்பி லான மருத்துவ உபகர ணங்கள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரியாபட்டி வட்டம் சித்த னேந்தலைச் சேர்ந்த பால் சாமி -ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சி யர் சுகபுத்ராவிடம் ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சினேகலதா பொன்னையா வழங்கினார். இந்த உபகரணங்கள் காரியாபட்டி, கல்குறிச்சி, முடுக்கன்குளம், முஷ்ட குறிச்சி உள்ளிட்ட பகுதி களில் உள்ள 20 துணை சுகா தார நிலையங்களுக்கு பயன் படும் வகையில் ஒதுக்கப்பட் டுள்ளன. நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணி கள்) யசோதாமணி, எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறு வனர் எம்.அழகர்சாமி உள் ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண் டனர்.</p>
