மேலூர் அருகே பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் அரிவாளால் வெட்டியதில் ஒரு கை துண்டிப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்
22 Nov 2025, 4:09 pm
<p><strong>மேலூர் அருகே பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் அரிவாளால் வெட்டியதில் ஒரு கை துண்டிப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்</strong></p>
<p>மதுரை, நவ.22– மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளை ஞர் முத்துராஜா (30) மீது சாதிவெறியர்கள் அடை யாளம் தெரியாத இடத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியதில் அவரது வலது கை மணிக் கட்டு துண்டாகியதோடு இடது கை பெருவிரலும் வெட்டுப் பட்டு உடலின் பல்வேறு இடங்க ளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஜேசிபி ஓட்டுநராக பணி யாற்றி வரும் முத்துராஜா, கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட 190 ஏக்கர் பஞ்சமி நிலங்களை உரிய பயனா ளர்களான பட்டியலின மக்க ளுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமான உத்தரவு பிறப்பித் திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலங்களை ஆதிக்க சக்திகள் பயன்படுத்தி வந்த தால் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜேசிபி யை இயக்க அழைத்து சென்ற ஆதிக்க சக்திகள், முன்கூட்டி யே திட்டமிட்டப்படி அரிவா ளால் தாக்கியதாக முத்துராஜா புகார் அளித்துள்ளார். மேலும், நில விவகாரத்தில் மீண்டும் தலையிட்டால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக உறவி னர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முத்துராஜாவின் புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முக்கிய குற்ற வாளிகள் அஜித், கருப்பசாமி, மகாராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதர குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம். கண்ணன், மாவட்டச் செயலா ளர் செ.முத்துராணி, மாவட்ட துணைத் தலைவர் செ.ஆஞ்சி ஆகியோர் மருத்துவமனை சென்று முத்துராஜாவை சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். குற்றத்தில் தொடர்பு டைய அனைவரையும் கைது செய்யவும், எஸ்சி/எஸ்டி தடுப்பு சட்டப்படி இழப்பீடு களை உடனடியாக வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாமதிக்கும் பட்சத்தில் போராட்டத்தில் இறங்குவோம் என அவர்கள் எச்சரித்தனர்.</p>
