குடியிருப்பில் உலாவிய கருஞ்சிறுத்தை குட்டி
24 Dec 2025, 4:16 pm
<p><strong>குடியிருப்பில் உலாவிய கருஞ்சிறுத்தை குட்டி</strong></p>
<p>கோவை, டிச.24- மருதமலை குடியிருப்பு அருகே கண்ட றியப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டியை வனத் துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருத மலை லெப்ரஸ் காலனி அருகே உள்ள குடியிருப்பில் புதனன்று காலை கருஞ்சி றுத்தை குட்டி ஒன்று தனியாக உலா வந் தது. முதலில் அதனை பூனை எனக் கருதிய மக்கள் நன்றாக பார்த்த போது அது கருஞ் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதைய டுத்து அப்பகுதி மக்கள் கோவை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தனியாக சுற்றி திரிந்த கருஞ்சிறுத்தை குட் டியை பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்த னர். தொடர்ந்து அதே பகுதியில் கருஞ்சி றுத்தை குட்டியின் தாயும் சுற்றி வரும் பகுதி என்பதால், அதே வனப்பகுதியில் குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை யினர் ஈடுபட்டுள்ளனர். தாயுடன் குட்டியை சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்தால், அதனை சென்னை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது.</p>
