தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே? கோயம்புத்தூரில் சிறுமி படுகொலை: வாலிபர் சங்கம் கண்டனம்

23 May 2026, 10:07 pm
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே? கோயம்புத்தூரில் சிறுமி படுகொலை: வாலிபர் சங்கம் கண்டனம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே? கோயம்புத்தூரில் சிறுமி படுகொலை: வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை, மே 23 - கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே விளையாடச் சென்ற 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, முகத்தை சிதைத்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப் பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த அநாகரிக மற்றும் மனிதாபிமானமற்ற செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

சமீபத்தில் தமிழக அரசு பெண்க ளின் பாதுகாப்பை உறுதி செய்வ தற்காக “சிங்கப்பெண் சிறப்பு படை” உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை அறிவித்து, நடை முறைப்படுத்தி வரும் சூழலிலும், இத்தகைய மிகக் கொடூரமான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது ஒட்டுமொத்த சமூகத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசின் சிறப்புப் படைகளும் திட்டங்களும் வெறும் காகித அளவி லும், அறிவிப்புகளிலும் மட்டுமே சுருங்கிவிடாமல், களத்தில் குற்றங்க ளைத் தடுக்கும் வகையில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

துரித விசாரணை, கடுமையான தண்டனை

கைது செய்யப்பட்டுள்ள குற்ற வாளிகள் மீது எவ்வித தொய்வும் இன்றி, போக்சோ மற்றும் கொலை வழக்குகளின் கீழ் மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் அவர்களு க்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

கண்காணிப்பை தீவிரப்படுத்துதல்

குடியிருப்புப் பகுதிகள், அரசுப் பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி (CCTV) கண்காணிப்பை முழுமையாகச் செயல் படுத்துவதோடு, காவல்துறை ரோந்துப் பணிகளைப் பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துக!

‘சிங்கப்பெண் சிறப்பு படை’ போன்ற அமைப்புகளின் செயல்பாடு களை மறுஆய்வு செய்து, அவை மக்கள் வசிக்கும் அடிமட்டப் பகுதிகள் வரை குற்றங்களைத் தடுக்கும் பணி களில் ஈடுபடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இத்தகைய பாலியல் வன்கொடுமைக்கு பின்னால் இருக்கும் கொடூர ஆணாதிக்க மனநிலையை மாற்ற சமூகத்தில் உரிய கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

இனி ஒரு பெண் குழந்தைக்குக் கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட குடும் பத்திற்குத் தகுந்த நீதியும், இழப்பீடும் விரைந்து கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள் ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.