தீக்கதிர் விரைவு செய்திகள்
16 Jun 2026, 10:22 pm

டெலிகிராமிற்கு ஒன்றிய அரசு தற்காலிக தடை!

புதுதில்லி, ஜூன் 16 - ஜூன் 21 அன்று ‘நீட்’ மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஜூன் 22 வரை இந்தியாவில் ‘டெலிகிராம்’ செயலி பயன் பாட்டிற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளி யிட்ட தேசிய தேர்வு முகமை (NTA), “தகவல் தொழில் நுட்பம் சட்டம், 2000 பிரிவு 69ஏ கீழ் இந்தியாவில் டெலிகிராம் பயன்பாட்டிற்கு தற்காலிக தடை விதிக்கப் படுகிறது. தவிர, ஏற்கெனவே அனுப்பிய மேசேஜ்களை எடிட் செய்யும் அம்சத்திற்கு ஜூன் 30-ம் தேதி வரை தடைவிதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜூன் 16 - சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிராக 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செ ய்திகள் வெளியாகியுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கண்டனம் தெரி வித்துள்ளார். “‘திறமையான (Effi cient) அதிகாரிகளை நிய மித்து விட்டேன்; சிங்கப் பெண் படையை அமைத்து விட்டேன்’ - என்று சீறிய முத லமைச்சரின் காதுகளுக்கு பிஞ்சுகளை இழந்து ஓல மிடும் பெற்றோர்களின் அழு குரல் கேட்கவில்லையா?” என்று கேட்டுள்ள மு.க. ஸ்டாலின், “கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங் களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்கூட்டியே தேர்தல்?

புதுதில்லி, ஜூன் 16 - 2026 பிப்ரவரியில் மக் கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், கோவா, பஞ் சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், டிசம்பர் அல்லது ஜனவரி யில் முன்கூட்டியே நடத்தப் படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி: புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

புதுச்சேரி, ஜூன் 16 - புதுச்சேரியில் என். ரங்க சாமி தலைமையில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட் டணி ஆட்சி நடக்கிறது. நமச் சிவாயம், மல்லாடி கிரு ஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில் என்.ஆர். காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பாஜக-வைச் சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகிய மூவர், புதிய அமைச் சர்களாக புதன்கிழமை யன்று பதவியேற்க உள்ள னர். காலை 9.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளு நர் கைலாஷ் நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.