தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்விக் கட்டணம் கறுப்புப் பணம் அல்ல: அதன் விவரங்களை சொல்ல என்ன தயக்கம்

5 Jun 2026, 11:49 pm
கல்விக் கட்டணம் கறுப்புப் பணம் அல்ல: அதன் விவரங்களை சொல்ல என்ன தயக்கம்

கல்விக் கட்டணம் கறுப்புப் பணம் அல்ல: அதன் விவரங்களை சொல்ல என்ன தயக்கம்

சென்னை, ஜூன் 5- கல்விக்கட்டணம் என்பது கறுப்புப் பணம் அல்ல அதன் விவரங்களை வெளியிட தயக்கம் ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள் ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாய மாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகை யில் வெளியிடும்படி, அனைத்து தனி யார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1அன்று சுற்றறிக்கை பிறப்பித் தார். இந்நிலையில், மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவி ப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங் களின் சங்கத்தின் சார்பி

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்ட பாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், ‘தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவ னங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப் படுத்த முடியாது’ என வாதிடப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், ‘தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. விதிகளின் படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்’ என வாதிடப் பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்டண விவரங்களை வெளி யிட மறுக்க முடியாது என்றும், தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது என்றும் தெளிவு படுத்தினார். கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங் களை சொல்லலாமே எனக் தெரிவித் ததுடன், வழக்கு குறித்து ஜூன் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.