முந்தய பக்கம்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு

6 Jul 2026, 10:19 pm
தீக்கதிர் சந்தா சேர்ப்பு

தீக்கதிர் சந்தா சேர்ப்பு

தருமபுரி மாவட்டம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக பென்னாகரம் நகரக் குழு சார்பில் நடைபெற்ற சந்தா சேர்க்கும் இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் பங்கேற்றார். உடன், மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜி, நகரக்குழு உறுப்பினர்கள் எம். தனபால், ஜி.சிவன், வெங்கடாசலம், கார்ல் மார்க்ஸ் மண்டபம் உரிமையாளர் சிவலிங்கம், ஷாமில் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திங்களன்று தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, ஓமலூர் தாலுகா செயலாளர் சேகர், தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வகுமார், மோகன், முருகன், பால் சங்க மாவட்டச் செயலாளர் அரியா கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றிய பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. இப்பேரவையில், தீக்கதிர் சந்தா தொகையை மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரிடம் வழங்கினர். இதில், மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, ராசிபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பெரியசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவுடைநம்பி, மூத்த தலைவர் எம்.ஜி.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி, மூத்த தோழர்கள் பி.ஜோதி மணி, பி.பழனிசாமி, நகரச் செயலாளர் சி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram