தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பேரெழுச்சி! தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கைது

11 Aug 2026, 12:36 am
மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பேரெழுச்சி! தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கைது

மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பேரெழுச்சி! தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கைது

திருப்பூர், ஆக.10-தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை அமலாக்கக்கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தொடர்ந்துநடைமுறைப்படுத்த வேண்டும், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் ஆகிய அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து திங்களன்று நாடு தழுவிய போராட்டத்தில், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கைதாகினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஆக.9 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திய பாரம்பரியத்துடன், நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள், எஸ்.கே.எம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில், மோடி அரசை கண்டித்துசிறை நிரப்பும் போராட்டம் அறிவித்தனர். இதனையேற்று, திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டங்களில் சுமார் 700 பேர் பங்கேற்று கைதானார்கள். திருப்பூர்மத்திய தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக திருப்பூர் குமரன் சிலை முன்பாக, இந்த போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி, ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் உரையற்றினர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், எல்.பி.எப், மாவட்

டப் பொருளாளர் ரங்கசாமி, ஐஎன்டியுசி மாவட்

டச் செயலாளர் செந்தில், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, யூடியூசி மாவட்டச் செயலாளர் சதீஷ் சங்கர், ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை முழக்கங்களுடன் தலைமை தபால்

நிலையம் முன்பு முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இங்கு பெண்கள் 60 பேர் உட்பட 330

பேர் கைது செய்யப்பட்டனர்.தாராபுரத்தில் சிஐடியு விவசாயிகள், விவசாயத் தொழிலாலர் சங்கங்கள் சார்பில் மறியல்போராட்டம் நடைபெற்றது. இதில் 57 பெண்கள்உள்பட மொத்தம் 80 பேர் கைதானார்கள். சிஐடியு மாவட்டதுணைத்தலைவர் என்.கனகராஜ்தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாய சங்க செயலாளர் ஆர்.வெங்கட்ராமன் வாழ்த்திப் பேசினார்.உடுமலை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்திற்கு சிஐடியு ஒருகிணைப்புக்குழு அமைப்பாளர் விஸ்வநாதன் தலைமையேற்றார். இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், விதொச மாவட்டச் செயலாளர் கனகராஜ், தவிச மாவட்டப் பொருளாளர் பாலதண்டபாணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர். மடத்துக்குளம் நால் ரோடுபகுதியில் சிஐடியு மடத்துக்குளம் தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற சாலை மாறியல் போராட்டத்தில் விவசாயசங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன் உள்ளிட்ட திரளனோர் பங்கேற்று கைதாகினர்.

ஈரோடு

ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாநிலச் செயலாளர்கே.சி.கோபிகுமார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்வீ.அமிர்தலிங்கம், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி,தொமுச மாவட்ட கவுன்சில் பொருளாளர் செ.தங்கமுத்து, எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் ஆர்.ரமணி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், விச மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, தவிச மாவட்டச் செயலாளர்ஏ.எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கதலைவர் கி.வே.பொன்னையன், விதொச மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

கோவை

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர்ஆர்.சிங்காரவேலு, மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், ஏஐடியுசிமாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட 300க்கும்மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி தலைமை ஏற்றார். இதில், தவிசமாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ராஜன்,விதொச மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில்,102 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டதுணைத்தலைவர் என்.சிவராஜன் தலைமை தலைமை ஏற்றார். இதில்,70 பெண்கள் உள்ளிட்ட 120 பேர் பங்கேற்று கைதாகினர். தொண்டாமுத்தூரில் நடைபெற்ற மறியலுக்குகே.தங்கவேலு தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்கம் சார்பில் என்.ஆறுச்சாமி,சிஐடியு இன்ஜினியரிங் சங்க பொதுச் செயலாளர் சி.துரைசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர். சூலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின்மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர். சுல்தான்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றசாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் சி.சபரீஷ்வரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் கே.ரத்தினகுமார், விதொசமாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில்,182பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்றசாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் வினோத் தலைமையேற்றார். இதில், சங்க நிர்வாகிகள் இளங்கோவன், மனோஜ் குமார், ஆல்துரைஉள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர். கூடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, விவசாயசங்க மாவட்டத் தலைவர் என்.வாசு தலைமையேற்றார். இதில், செயலாளர் யோகா, எல்பிஎப்நெடுஞ்செழியன், சிஐடியு எம்.ஏ குஞ்சு முகமதுஉள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்புநடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் சி. நாகராசன் தலைமையேற்றார். இதில், விவசாயிகள் சங்க மாநிலதுணைத் தலைவர் பி. டில்லிபாபு, மாவட்டச்செயலாளர் சோ. அருச்சுனன், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் சண்முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக, பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பாலக்கோட்டில் நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி. கலாவதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் பங்கேற்று கைதாகினர். பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்டநிர்வாகி வெங்கட்டேசன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி ஏ.சி. மணி, விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எம். குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர். அரூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து, விவசாயிகள் சங்க கே.என். மல்லையன், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றுகைதாகினர்.

சேலம்

சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்புநடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாநிலதுணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன்,தலைவர் டி. உதயகுமார், எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், யூடியூசி நிர்வாகி ராஜேந்திரன், ஏஐயூடியூசி நிர்வாகி மோகன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சம்பத், ஐஎன்டியுசி நிர்வாகி நடராஜ், ஏஐசிசிடியு நிர்வாகிநடராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.இதேபோன்று, மேட்டூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, சி.கருப்பண்ணன், ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ. முருகேசன்,தமிழ்நாடுவிவசாயிகள்சங்க மாவட்டப் பொருளாளர் வெங்கடாசலம், எடப்பாடி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கணபதி, சிபிஎம் எடப்பாடி தாலுகா செயலாளர் நடராஜ், சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ. ஆறுமுகம், ஓமலூர் பகுதியில் நடைபெற்றபோராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச்செயலாளர் பி.ஆரியாகவுண்டர், சிபிஎம் செயலாளர் சேகர், வாழப்பாடி பகுதியில் நடைபெற்றமறியல் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி. தங்கவேல்,பனமரத்துப்பட்டி பகுதியில் நடைபெற்ற மறியல்போராட்டத்தில் சரவணன், ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் அன்பு உட்பட சேலம்மாவட்டத்தில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தொழிற்சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுகைதாகினர்.

நாமக்கல்

நாமக்கல் மோகனூர் ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற சிறை நிரப்பும்போராட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சு.சுரேஷ், யூடியூசி மாவட்டச் செயலாளர் வி.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.சிவக்குமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட உதவிச்செயலாளர் எஸ்.கே.சிவசந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன்,விவசாயிகள் சங்க மாவட்ட உதவித்தலைவர் கே.பூபதி, ஏஐடியூசி கட்டிடசங்க மாவட்டப் பொருளாளர் ஜி.முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.காத்தவராயன்ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏ.ஆதிநாராயணன், செயலாளர் என்.செல்வராஜ் உள்ளிட்ட திரளனோர் பங்கேற்று கைதாகினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.