தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறநிலையம், ஊரகவளர்ச்சி, மருத்துவத்துறை நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும்!

11 Aug 2026, 9:23 pm
அறநிலையம்,   ஊரகவளர்ச்சி,  மருத்துவத்துறை நியமனங்களில்  நடப்பு நிலையே தொடர வேண்டும்!

அறநிலையம், ஊரகவளர்ச்சி, மருத்துவத்துறை நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும்!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 11 -இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையையே தொடர வேண்டும் என்று தமிழக அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டக்கல்வி அவசியமானது!

இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை ‘கிரேடு 1 செயல் அலுவலர்’ மற்றும் ‘உதவி ஆணையர்’ பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர் களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோவில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர்பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும். நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக் கிறது.

அறநிலையச் சட்டத் திருத்தம் கூடாது!

இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, ‘கிரேடு 1 செயல் அலுவலர்’களாகநியமிக்கப்படுவதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ளஇந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9-ஆவது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2-ஐ ரத்து செய்ய உள்ளதாகஅறிகிறோம். இதுபொருத்தமற்றதும், அறநிலை யத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஐஎப்எஸ் அதிகாரிகளை நியமிப்பது சரியல்ல!

இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுகாறும் திட்ட இயக்குநர் பொறுப்புகள், பதவி உயர்வு மூலமாகவோஅல்லது ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டோ நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது அந்தபணியிடங்களில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐஎப்எஸ் அதிகாரிகளை நியமிக்கஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படிநியமிப்பது, பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உத வாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை (எண்: 2731 நாள் 28.07.2026) ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குக!

இதேபோன்று, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத் துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின்மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை, வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.