தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றுக! மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

3 hours before
கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றுக! மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றுக! மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 28 - கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 28) மாநிலம் முழு வதும் மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலு வலகங்கள் முன்பு பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் 9,631 கேங்மேன்கள் உள்ளனர். களஉதவியாளர், கம்பியாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கேங்மேன்கள் செய்கின்றனர். எனவே, இவர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும் என்று மத்திய அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதனையொட்டி 14.3. 2026 அன்று கையெழுத் தான முத்தரப்பு ஒப்பந்தத் தில் கேங்மேன் பணியாளர் களை நான்காம் நிலை ஊழி யர்களாக மாற்ற நிர்வாகம் ஒப்புக்கொண்டது. தவெக அரசு அமைந்த பிறகு ஜூன் மாதம் மின்துறை அமைச்ச ரை சந்தித்து இதுகுறித்து மத்திய அமைப்பினர் பேசி யுள்ளனர். ஒரு மாத கால அவ காசத்தில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச் சர் உறுதியளித்துள்ளார். ஒரு மாதம் கடந்த நிலை யில், ஒப்பந்தப்படி கேங்மேன் பணியாளர்களை கள உதவி யாளர்களாக மாற்ற வேண்டும், விருப்ப மாறுதல் பெற்ற அனைவரையும் பணி விடுவிப்பு செய்ய வேண்டும், வேலைப்பளு இல்லாத இடத்தில் சட்ட விரோதமாக கேங்மேன்களை பணி செய்ய நிர்பந்திக்கக் கூடாது என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக மத்திய அமைப்பின் காஞ்சி புரம் மண்டல கிளைகள் சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இ.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநி லத் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் தி.ஜெய் சங்கர், துணைப் பொதுச் செயலாளர்கள் பீர்முக மதுஷா, ரவிக்குமார், அருட் செல்வன், காஞ்சி மண்ட லச் செயலாளர் ஏ.முருகா னந்தம், மாநிலச் செயலாளர் வி.தேவக்குமார், சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் உள்ளிட்ட திட்ட நிர்வாகிகள் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.