சிட்டுக்குருவி!
26 Apr 2026, 12:34 am

சிட்டுக்குருவி!

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி கேளாயோ- உன் பட்டுச் சிறகை விரித்தேதான் பறந்து வாராயோ!

விட்டம் தன்னில் அழகாக கூடு கட்டினாய் - நீ இஷ்டம் போல சுற்றி வந்து ஏனோ கத்தினாய்!

அரிசிப் பருக்கை கையில் வைப்பேன் உண்ண வாராயோ - என் அருகமர்ந்து நீவளர்ந்த கதைகள் சொல்லாயோ!

சின்னக் கண்ணும் சிவந்த மூக்கும் பார்க்கப் பிடிக்குமே - உன் சிணுங்கல் சத்தம் கேட்டால் எனக்கு சிரிப்பு வெடிக்குமே!

பள்ளம் தன்னில் தேங்கும் நீரில் மூழ்கிக் குளித்திடு- அதில் துள்ளி எழுந்துநீர்த்துளியை என்மேல் தெளித்திடு!

முற்றம் தன்னில் ஓடிப் பிடித்து விளையாட வாராயோ - யாரும் தொட்டுவிட அருகில் வந்தால் பறந்து போவாயோ!

தூணில் ஏறி எட்டிப் பார்த்தால் ஒளிந்து கொள்ளுவாய் - உன் துணையைக் கூட்டித் தோட்டமெங்கும் நடனம் ஆடுவாய்!

-அருப்புக்கோட்டை செல்வம்