முந்தய பக்கம்

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி

9 May 2026, 9:28 pm
மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன்முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சுவேந்து அதிகாரி. இந்நிலையில், கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் சனியன்று நடை பெற்ற விழாவில் அவர் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி சுவேந்து அதிகாரிக்கும், 5 அமைச்சர்க ளுக்கும் பதவியேற்பு மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்க ளின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

காவி உடையில்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மிக நெருக்கமான வரான சுவேந்து அதிகாரி, 2020ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தற்போது முதல மைச்சராக பதவியேற்றுள்ளார். எப்போ தும் வெண்மை உடையில் தான் சுவேந்து அதிகாரி இருப்பார். ஆனால் முதலமைச்ச ராக பதவியேற்பின் போது சுவேந்து அதி காரி காவி உடையுடன் காணப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram