தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோறு

2 May 2026, 8:00 pm
சோறு

சோறு

சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் கால் கடுக்க வரிசையில் நின்று இரண்டு கிலோ ரேசன் அரிசியை ஒரு வழியாக வாங்கி விட்டாள் பூல்சன்னின் அம்மா. நின்றிருந்த பெருங்கூட்டத்தைப் பார்த்து இன்னைக்கி நமக்கு அரிசி கிடைக்காது என்று தான் நினைத் தாள். ஆனால், அந்த நீண்ட வரிசை எறும்பு ஊருவது போல் மெது வாகச் சென்றாலும் நிற்காமல் ஊர்ந்து கொண்டே சென்றது. போலீஸ் மட்டும் அங்கு வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியிருக்கலைன்னா கூட்டம் கட்டுக்குள் அடங்கியிருக் காது. கூட்ட நெரிசலில் சிக்கி பூல்சன்னின அம்மா - அந்தக் கிழவி செத்துப் போனாலும் போயிருப் பாள். அந்தளவிற்கு தள்ளுமுள்ளு.

அன்னைக்கு காலை ஒன்பது மணி இருக்கும். ரேசன் அரிசியை கடத்திச் சென்ற மூன்று லாரிகள் கை யும் களவுமாக மடக்கி பிடிக்கப் பட்டன. கிலோ ஒரு ரூபாய் முப்பத்தி ஐந்து பைசாவிற்கு விநியோகிக்கப் போவதாக செய்தி பரவியது. அந்தச் செய்தி தெரிந்துதான் பூல்சன்னின் அம்மா, பசியால் வயிறு ஒட்டி நிமிர்ந்து நிற்கக் கூட திராணி இல் லாத நிலையிலும் அங்கு சென்றாள். எப்படியும் அரிசியை வாங்கி விட வேண்டுமென்று தட்டுத் தடுமாறி ஓட்டமும் நடையுமாய் சென்றாள்.

அன்று பூல்சன் வீட்டில் தான் இருந்தான். அவனுக்கு முடிய வில்லை. உடம்புக்கு நோவு ஒன்னு மில்லை. ஒரு நாளைக்கு வெறும் இரண்டு ரொட்டி மட்டும் தின்னுட்டு ஐந்து நாளும் விடாம நாள் பூரா வேலை செய்தால் மேலுக்கு முடியாமல் போகாமல் இருந்தால் தான் அதிசயம்.

பொதுவாகவே அவனின் வலுவிழந்த உடம்பு வேகாத வெயி லிலும் மழையிலும் வேலை செய்து மோசமாய் போனது. இரண்டு நாளா முனங்கிட்டே இருந்தான். ஏதாவது மாத்திரை மருந்து வாங்கி முழுங்கக் கூட கையில் காசு இல்லை. குடிக்க கஞ்சி கூட இல்லாத வீட்டில் மருந்துக்கு எங்க போறது? ம்ம்... முனகல் தான் நிவாரணம்.

பூல்சன்னின் மனைவி வீட்டுக்கு வந்து நாலு மாசத்துக்கு மேல இருக்கும். அந்த ஊரில் உள்ள ஒரு காண்ட்ராக்டர் வீட்டில் வேலை செய்கிறாள். ஒரு நாள் மாலை வேலைக்கு சென்றவள் திரும்பி வரவேயில்லை. விசாரித்ததில் காண்ட்ராக்ட் காரரும் தன் வீட்டுக்கு வரவில்லை என்று சொன்னாராம். பூல்சன்னின் அம்மா அழுகாத நாளில்லை. அழுது, அழுது தான் அவள் ஆறுதலானாள். பூல்சன்னோ ஒன்றும் நடக்காததுபோல் அமைதியாய் இருந்தான். அவன் ஆம்பளை அப்படித்தானே இருப்பான்... இருந்தாக வேண்டும்

அன்று இரவு பூல்சன்னுக்கு தூக்கமில்லை. அடிக்கடி எழுந்து தண்ணீரை மட, மட வென குடித்தான். அவன் மனைவி ஞாபகம் வந்து போய்க் கொண்டிருந்தது. வேலை முடித்துத் திரும்பும் போது காண்ட்ராக்டர் வீட்டில் மிச்சம் மீதி விழுவதையெல்லாம் எடுத்து வரு வாள். அது குழந்தைகளின் பசி யாற்றும். அது மட்டுமா, மூனு மாசத்துக்கு ஒரு முறை விலை யுயர்ந்த பழைய காடி சேலைகளை கொண்டு வருவாள். ஆனால் இரவு நேரங்களில் அவனோடு ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.

“ஏன்டா இப்படி வெறும் மேலோட தரையில படுத்துக் கிடக்கிற” பூல்சன்னின் அம்மா கேட்டதற்கு...

“ம்ம்... என்னத்தச் சொல்ல அவ அன்னிக்கி காண்ராக்டர் வீட்டி லிருந்து வரும் போது நல்லா குடிச்சிட்டு வந்தா...”

பூல்சன்னின் கண்கள் மேல் பார்த்து குத்தி நின்றது. எந்த அசைவும், உணர்ச்சியும் இல்லாமல் வாய் மட்டும் பேசியது. காண்ட்ராக்டர் வீட்டு வசதியான வாழ்க்கை இந்த குடும்பத்தின் மீது பெரிய பாறாங் கல்லை தூக்கிப் போட்டிருச்சு.

ன்களை முடித்துக் கொண்டு கையில் கோடரியுடன் வீதியின் கடைசியில் இருந்த அந்தச் சதுக்கத்திற்கு புறப்பட்டான். அங்குதான் தங்கள் உழைப்பை விற்க தொழிலாளர்கள் நிறைய்ய.. கூடுவார்கள். யாராவது வேலைக்கு கூப்பிட மாட்டாங்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அந்தச் சதுக்கத்திற்கு பக்கத்திலேயே ஆடுகள் விற்பனையாகும் சந்தை உண்டு. ஆட்டு மந்தைகள் மொத்த விலைக்கு அங்கு விற்கப்படுவது வழக்கம். பூல்சன்னின் மனைவி அவனை கைவிட்ட பிறகு சீக்குப் பிடிச்ச ஆடாக சந்தையில் போனியா காத ஆடாக தன்னைத் தானே உணர்ந்தான். அவனின் வலி அம்மா வான அந்தக் கிழவிக்கு மட்டுமே புரியும். குடும்பத்தை கவ்வியுள்ள வறுமையின் கொடுமையையும் அவள் அறிவாள். பூல்சன்னின் அப்பா அதே ஊரில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தான். வேறொரு பெண் ணுடன் குடும்பம் நடத்தி வந்தான்.

பூல்சன் வீடு செம்மை பார்க்கும் தொழில் தெரிந்தவன். அவனுக்கு மூன்று பிள்ளைகள். மூனுமே பெண் பிள்ளைகள். மூத்தவள் புத்தியா.. பதினோரு வயதாகிறது. அவளுக்கு நேர் இளையவள் துனியா... எட்டு வயது. கடைக்குட்டி முனியா அவ ளுக்கு 4 வயதுதான் ஆகிறது. ஆண் குழந்தை இல்லை. மூத்தவள் புத்தியா தான் வீட்டு வேலைகள் பூராத்தையும் பார்த்துக் கொள்வாள்.

எப்படியோ ரேசன் அரிசியை வாங்கிக் கொண்டு பொழுது சாய்வ தற்குள் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தாள் பூல்சன்னின் அம்மா. உள்ளே நுழைந்தது தான் தாமசம் “பாட்டி எங்க போன?” கடைக்குட்டி முனி கேவிக் கேவி அழுது கொண்டே கேட்டாள்.

“கண்ணு அழுகாத. உனக்கா கத்தான் சோறு பொங்க அரிசி வாங்கப் போனேன். இன்னைக்கி ராத்திரி ஆக்கித் தாரேன்.. சந்தோஷ மா சாப்பிடு.. என்று சமாதானப் படுத்தினாள் பூல்சன்னின் அம்மா.

இதைக் கேட்டதுமே முனியா வின் கண்கள் சந்தோஷத்தால் மின்னியது. ஆனாலும் அழுகைக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல னுமில்ல.. தன்னுடைய அக்காவைக் கைகாட்டி “இவள் இன்னிக்கி பூரா வும் என்ன அடிச்சிக்கிட்டே இருந்தாள் பாட்டி” என்ற புகார் செய்தாள்.

“நீ அழாம இரு. உன்ன அடிச்சவ கண்ணத்த சேத்தி ஒன்னு அப்புறமா கொடுத்தர்றேன்.. சரியா... “ஆமா பாட்டி.. நீ ஆக்கப் போற சோத்த நானே சாப்பிட்டுருவே.. துனியாவுக்கு ஒரு பருக்கை கூட கொடுக்கமாட்டேன்”. அதானே உனக்குத்தா நா சமைச்சுத் தருவேன்... எல்லா உனக்கு மட்டும் தான் கண்ணு. கிழவி முனியாவின் கண்ணத்தில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்ட போது அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

“ புத்தியா அக்காவுக்கும் கொடுக்கக் கூடாது பாட்டி... நீயும் நானும் மட்டும் தான் சாப்பிடனும்... அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் கொடுக்கலாம். என்ன பாட்டி...

ஐயா, சோறு. சோறு நல்லா பொங்கி வரும்ல பாட்டி”... முனியா வின் சந்தோஷத்திற்கு அளவே யில்லை.

“கண்ணு பாவம் வயசான நம்ம நாய்க்குட்டிக்கும் கொடுக்கலாம்.” ஊகூம்... நா தரமாட்டே... அப்பா வுக்கு மட்டும் கொஞ்சம் தருவே... அப்பா பாவம் பாட்டி.. சரி அம்மா இன்னும் ஏன் விட்டுக்கு வரல? கிழவி எரிச்சலானாள். முனியா வை கோபத்தோடு திரும்பிப் பார்த் தாள். மனசுக்குள்ள, “அறிவு கெட்ட வளே, நான் தானாக்கும் அவள முந்தானைல முடிச்சு வச்சிருக்கே.. என்று புலம்பிக் கொண்டாள். முனியா அமைதியானாள்.

புத்தியா எங்கிருந்தோ காய்ந்த இலைச் சருகுகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அடுப்பில் உலை கொதித்துத் கொண்டிருந்தது. வாங்கி வந்த அரிசி உலையில் வெந்து கொண்டிருந்தது. களைத்துப்போன கிழவி கதவோரம் சாய்ந்தவாறே படுத்து குறட்டை விட ஆரம்பித் தாள். பூல்சன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை.'

அடுப்பைச் சுற்றி மூன்று பேரும் உட்கார்ந்து கொண்டு சோறு எப் போது பொங்கும் என ஆவலாதி யோடு பாத்துக் கொண்டிருந்தார்கள். “

அக்கா எனக்குச் சோறு போடு வில... கட்டாயம் போடணும் என்றாள் முனியா.

“ கட்டாயம் தருவே. வடிச்ச கஞ்சி யோட மணக்க மணக்க உனக்கு தருவே... கொஞ்சம் பொறுமையா இரு..” “ஏய் துனியா. பாட்டி ரொம்ப அசந்துருச்சு.. அதுகாலக் கொஞ்சம் புடிச்சு விடேன்... என்றாள் புத்தியா... “வேண்டாம் ... வேண்டாம்...” கத்தினாள் முனியா...“ பாட்டி முழி ச்சுக்கும் .. அப்புறம் அது பூரா சோத்தையும் சாப்புட்டும்டி. எனக்கு எதும் தராது.”

அடுப்பில் சோறு வெந்து கொண்டி ருந்தது. துனியா பேச்சுக் கொடுத்தாள்... “ம்ம்.. முனிக் கண்ணுக்கு கல்யாணம் நடக்குமாம். மாப்பிள்ளை யானைல வருவாராம்... சிங்கம் கர்சிக்குமாம்... இதெல்லாத்தை விட விருந்து நடக்குமாம்.

அதுக்கு சோறு பொங்குவாங்க... இல்லையா முனி...” பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே புத்தியா சோறை பதம் பார்த்தாள். வெந்திருந்தது.

வேலி ஓரமா, அப்பவே பிடுங்கி வந்த போரோ இலைகளை சோத்துக்குள் போட்டு நீளமான கரண்டியை வைத்து கிண்டி விட்டாள். “அக்கா சோறு பொங்கியாச் சில்ல.. அப்புறம் ஏன் இன்னும் கிண்டிக்கிட்டே இருக்க .. அடுப்பில் இருந்து இறக்கு... இரண்டுநாளா சாப்பிடவேயில்ல.

எங்க பசியில உயி ரே போயிடுமோன்னு பயமாயிருக்கு. “ஆமா முனி.. நா மட்டும் என்ன சாப்பிட்டேன்?... சரி...சரி.. தட்ட எடு” “ஐய்யா, நா சோறு திங்கப் போறேன், சோறு திங்கப் போறேன்..” முனியா சந்தோஷத்தில் ஆட ஆரம்பித் தாள். அவளோடு துனியாவும் சேர்ந்து கொண்டாள்.

“நாந்தா முதல்ல சாப்பிடுவேன்....” “இல்லையில்ல, நான் தா முதல்ல...” புத்தியா சொன்னாள். .“ ரெண்டு பேரும் பேசாம இருங்க... முதல்ல அப்பாவுக்கு கொடுக்கலாம்... அம்மா போனபிறகு அப்பா ரொம்ப பாவம்...” “அம்மா இருந்தா எனக்குத்தா முதல்ல கொடுப்பா... அப்புறந்தா அப்பா வுக்கு .. போ..” முனியா ஏற்கவில்லை. “முனியா கண்ணு அம்மா இப்போ இல்ல.

அப்பாவ யாரு பாத்துக் கிறது?” புத்தியா மென்மையாக சொன் னாள். முனியா உடனே “நா பாத்து க்குவே... சரி அப்பாவுக்கே முதல்ல கொடு... அப்புறம் பாட்டிக்கு.. அதுக்கப் புறம் நம்ம மூணு பேருக்கு...” என்னதான் முனியா வாய்ல சொன்னாலும் முகம் வாட்டமா யிருந்தது. புத்தியா சொன்னாள். ..” ஒன்னும் கவலைப்படாதே... நாளை க்கு வரைக்குமே நம்ம எல்லாத்து க்கும் வரும்..” நாளைக்கு திரும்ப வும் அடுப்ப பத்த வைக்கத் தேவை யில்ல.. சரியா...” ஒரு வழியாக இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு புத்தியா கடைசியாக ஒரு முறை போரோ இலைகளைப் போட்டு சோறை கிண்டி விட்டாள்.

முனியா வைத்த கண் மாறாமல் சோத்துப் பானையை யே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு கருகிய வாடை அடித்ததை உணர்ந்த துனியா ... “அக்கா ... அக்கா..”எ ன்று அலறி னாள்.

வெந்த சோறு அடுப்புக்குள் விழுந்து.. பானை பிடித்த வாடை எல்லாப் பக்கமும் பரவியது. பானை உடைந்து ஒழுகியது. - மைதிலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ரமேஷ் சந்திர ஜா தமிழில் : கே.வசந்தன் நன்றி : பிரண்ட் லைன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.