சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய மண்டல அமர்வுக்கு நீதிபதிகளை நியமித்திடுக!! ராஜ்நாத் சிங்கிற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்
1 Oct 2026, 10:59 pm

சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய மண்டல அமர்வுக்கு நீதிபதிகளை நியமித்திடுக!! ராஜ்நாத் சிங்கிற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை, அக். 1 -சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய மண்டல அமர்வுக்கு நீதிபதிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தீர்வு காணப்படாத 2,000 வழக்குகள்...

சென்னை ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வு நீதிபதிகள் இல்லாததால் செயல்படாமல் இருப்பது, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அமர்வில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. விசாரணைகள் முடங்கியுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், பணிப் பலன்கள், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகத் தங்களது இளமைக் காலத்தை அர்ப்பணித்த முன்னாள் ராணுவத்தினர், சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக வயதான காலத்தில் நீண்டகாலமாக நீதிமன்ற வாசலில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினருக்கு இழைக்கும் அநீதியாகும்...

தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த முன்னாள் ராணுவத்தினருக்கு உரிய நீதியை வழங்காமல், வழக்குகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்திருப்பது மிகுந்த அநீதியாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உரிமைகளையும் நீதியையும் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினர் பெற ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.